ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை, கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டை, ஆமை, கடல் குதிரை, சுறா, டால்பின் உள்ளிட்ட, 53 வகையான கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க, மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனால், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில், தடை செய்யப்பட்ட, கடல் அட் டையை மீனவர்கள் பிடிப்பதால், கடலில் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்று, கடலோர பாதுகாப்பு போலீசார், அயூப்கான் என்பவரது விசைப்படகில் சோதனையிட்ட போது, 150 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. இவற்றை, இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு, ஐந்து லட்சம் ரூபாய். மண்டபம் கடலோர பாதுகாப்பு போலீசார், படகு உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X