திருப்புவனத்தில் குலுக்கலில் கோழி குஞ்சு வியாபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் குலுக்கலில் கோழி குஞ்சு வியாபாரம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்புவனம்;திருப்புவனம் வட்டாரத்தில் ஒரு ரூபாய்க்கு கோழி குஞ்சு விற்பனை செய்யப்படுவதால் சிறுவர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது பலருக்கும் பிரியம் தான். நகர் புறங்களில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் செல்லப்பிராணிகள் வளர்ப்பு கனவாகவே உள்ளது.
சிறுவர்கள் விரும்பும் வகையில் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ணமயமான கோழி குஞ்சுகள் அதிகளவில் திருப்புவனத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு கோழி குஞ்சு பத்து ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
திருப்புவனம் நகரில் குலுக்கல் மூலம் ஒரு கோழி குஞ்சு ஒரு ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. பத்து சிறுவர்கள் சேர்ந்த பின் அவர்களிடம் தனித்தனியாக ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டு ஒன்று முதல் பத்து வரையிலான ஒரு நம்பர் வழங்கப்படுகிறது. குலுக்கலில் எந்த நம்பர் வருகிறதோ அவருக்கு கோழி குஞ்சு பரிசாக வழங்கப்படுகிறது. பல சிறுவர்கள் ஆர்வத்துடன் குலுக்கலில் பங்கேற்று கோழி குஞ்சு வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில,'' நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வருகிறோம் போந்தா கோழி, கிளி ராஜா என இரு வகை உள்ளது. இதில் கிளிராஜா அழகுக்காக வளர்க்கப்படுகிறது. சிறுவர்கள் விரும்பி வாங்குவதால் குலுக்கல் நடத்தி விற்பனை செய்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X