இங்கிலாந்தின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தியது 'இஸ்ரோ'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இங்கிலாந்தின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தியது 'இஸ்ரோ'

Added : செப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இங்கிலாந்தின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தியது 'இஸ்ரோ'

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ, இங்கிலாந்து நாட்டின், இரண்டு செயற்கைக்கோள்களை, நேற்றிரவு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கிருந்து, இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி' ஆகிய ராக்கெட்கள் வாயிலாக, செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது. அவற்றுடன், வணிக ரீதியிலாக, பிற நாடுகளின், செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி., - சி 42' ராக்கெட் மூலம், இங்கிலாந்தின், 'நோவாசார் எஸ்1 - 4' ஆகிய இரு செயற்கைக் கோள்களை நேற்றிரவு 10:08 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ராக்கெட் புறப்பட்ட, 18வது நிமிடத்தில் தரையில் இருந்து 583 கி.மீ., துாரம் உள்ள திட்டமிட்ட சுற்றுவட்ட பாதையில், இரு செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்தியது. இது இஸ்ரோ அனுப்பிய பி.எஸ்.எல்.வி., வகையில், 44வது ராக்கெட் ஆகும்.முழுக்க, வணிக ரீதியிலாக அனுப்பப்பட்ட, 889 கிலோ எடையுள்ள, இரு செயற்கைக்கோள்களும், இங்கிலாந்தின் நிலப்பரப்பு, வெள்ளம் மற்றும் பேரிடர் கண்காணிப்பு, கடல் பயன்பாடு, காப்பு காடுகளின் வரைபடத்தை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-செப்-201816:54:37 IST Report Abuse
Loganathan Kuttuva வெளிநாட்டினருக்கு குறைந்த செலவில் சிறந்த சேவை.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-செப்-201812:20:19 IST Report Abuse
Cheran Perumal வருமானம் ஈட்டி அதைக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் இந்த செயல் முறை வளரும் நாட்டுக்கும் மிகவும் சிறந்த நடைமுறை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X