பருப்பு வகைக்கு மாறும் சிவகங்கை விவசாயிகள் * 1,250 ஏக்கர் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருப்பு வகைக்கு மாறும் சிவகங்கை விவசாயிகள் * 1,250 ஏக்கர் அதிகரிப்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், நெல் விவசாயிகள் பருப்பு வகை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனால் 1,.250 ஏக்கர் அதிகரித்தது. மாவட்டத்தில் 2.10 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நெற்பயிர்கள் கருகின. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். குறுகிய கால பயிர்களான பாசிப்பயறு, துவரை, உளுந்து போன்ற பருப்பு வகைகளை சாகுபடி செய்ய துவங்கினர். மாவட்டத்தில் 2012-13 ல் 3,320 ஏக்கர் சாகுபடியானது. அது படிப்படியாக உயர்ந்து, 2017-18 ல் 5,250 ஏக்கராக அதிகரித்தது. மேலும் இந்த ஆண்டு 1,250 ஏக்கர் அதிகரிக்கும் என, வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போதிய மழை இல்லாததால் சிவகங்கை மாவட்டத்தில் இறவை சாகுபடி குறைந்து வருகிறது. மானாவாரி சாகுபடி அதிகரிக்கிறது. பருப்பு வகைகளை சாகுபடி செய்தால், இழப்பு ஏற்படாது என்பதால் விவசாயிகள் மாறி வருகின்றனர். நீர்ப்பாசன வசதி உள்ளோர் நெல் பயிருக்கு பின், கோடையில் பருப்புகளை வகைகளை சாகுபடி செய்கின்றனர். இதனால் பரப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தரிசு நிலங்களிலும் தொகுப்பு திட்டம் மூலம் பருப்பு வகைகள் சாகுபடி அதிகரித்தது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X