நல்லாசிரியருக்கு பொற்கிழி வழங்கிய திருக்குறள் செல்விகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியருக்கு பொற்கிழி வழங்கிய திருக்குறள் செல்விகள்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி:நல்லாசிரியர் விருது பெற்ற காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக்., பள்ளி தமிழாசிரியர் செயம்கொண்டானுக்கு அவரிடம் பயின்ற முன்னாள், இந்நாள் மாணவர்கள் 1330 நாணயங்கள் கொண்ட பொற்கிழி அளித்து பாராட்டினர்.திருக்குறள் செல்வி நாச்சாள்: இன்று 600-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேச எனக்கு உறுதுணையாக இருந்தவர் தமிழாசிரியர் செயம்கொண்டான். திருக்குறள் மட்டுமன்றி தமிழின் அத்தனை இலக்கிய நுால்களையும் படிக்க வைத்து, எங்களை உருவாக்கினார்.
இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊரை சேர்ந்த பழைய மாணவர்கள் இங்கு வந்துள்ளோம். கடந்த ஆண்டு தினமலர் நாளிதழின் 'லட்சிய ஆசிரியர்' விருதை பெற்றார். இவரிடம் பயின்ற 36 மாணவர்கள் 1330 குறளையும் ஒப்புவித்து மாநில அரசின் திருக்குறள் செல்வி விருது பெற்றுள்ளனர். 100 பேர் அறம் விருது பெற்றுள்ளனர், என்றார்.
நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி இயக்குனர் ராசாராம் தலைமை வகித்தார். தென்றல் ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குனர் ஹரிகரன், வள்ளுவர் பேரவை செயலர் தமிழ் முடியரசன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் முருகேசன், சீனிவாசன், தேவகோட்டை டி.பிரிட்டோ பள்ளி ஆசிரியர் அன்பரசன், கார்த்திகேயன் பள்ளி செயலர் சுவேதா, வைரவன் குருக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக திருக்குறள் செல்வி சிவரஞ்சனி வரவேற்றார். ஜோசி அபர்ணா, சோ.அருண்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X