சாமியார் வீட்டிற்கு தீ வைப்பு கார் உடைப்பு: 7 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமியார் வீட்டிற்கு தீ வைப்பு கார் உடைப்பு: 7 பேர் கைது

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை;சிவகங்கை அருகே இரவில் சாமியார் வீட்டை தாக்கி தீவைத்த கும்பல் அவரது காரையும் உடைத்தது. இதை தடுக்க முயன்ற வாலிபருக்கு தலையில் வெட்டு விழுந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை அருகே உள்ள சக்கந்தி, மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன்.சாமியாரான இவர், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளார்.இவருடன், அவரது சகோதரி மகன் அஜீத்குமார்,18, தங்கி இருந்தார். முத்துராமனின் வீட்டை ஓட்டி ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிேஷகம் நடைபெற்றது. அப்போது இடையூறாக ஆக்கிரமித்து கட்டியுள்ள முத்துராமன் வீட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அதே ஊரைச்சேர்ந்த செந்தில்முருகன், 30, மற்றும் சிலர் கூறியுள்ளனர். அதை முத்துராமன் ஏற்க மறுத்துள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது முத்துராமன், 'தனக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள்' என கோபத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் செந்தில் முருகனின் தந்தை பொன்னுச்சாமி, 62, கடந்த செப்.,14ல் திடீரென இறந்து விட்டார். அவரை முத்துராமன் தான் மந்திர வேலை செய்து கொன்று விட்டதாக செந்தில்முருகன் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரமுற்றனர்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு செந்தில் முருகன் மற்றும் அவரது உறவினர்கள் சென்று முத்துராமன் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.. தடுக்க முயன்ற அஜீத்குமாருக்கு தலையில் வெட்டி விட்டு, வீட்டிற்கு தீவைத்தனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முத்துராமன் கார் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் கார் சேதமடைந்தது.காயமடைந்த அஜீத்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிந்து செந்தில்முருகன், அவரது அக்காள் ராஜேஸ்வரி, அவரது கணவர் முத்துப்பாண்டி, தங்கை தமிழ்செல்வி, அவரது கணவர் ஜெயக்குமார், உறவினர் மணிகண்டன், செந்தில்முருகனின் மனைவி சசிகலா,24, ஆகிய 7 பேரை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X