அவசர சிகிச்சை கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவசர சிகிச்சை கருத்தரங்கம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி;காரைக்குடியில் அப்போலோ ரீச் மருத்துவமனை சார்பில் அவசர மற்றும் அதி தீவிர மருத்துவம் குறித்த கருத்தரங்கம் சிவகங்கை மருத்துவ கல்லுாரி முதல்வர் வனிதா தலைமையில் நடந்தது. மதுரை அப்போலோ மருத்துவமனை செயல் தலைவர் ரோகிணி முன்னிலை வகித்தார்.அவர் பேசும்போது அப்போலோ குழும மருத்துவமனைகளில் நவீன வசதிகளுடன் கூடிய உபகரணங்கள் மூலம் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றார். பல்வேறு பகுதியிலிருந்து வந்த டாக்டர்கள் மருத்துவம் சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
டாக்டர்கள் ஜூட் வினோத், செந்தில்குமரன், சித்ருபி சர்மா, ராமகிருஷ்ணன், செய்யது முகம்மது புகாரி, அர்ஜூன் தாயுமானவன் பேசினர். ஏற்பாடுகளை மானகிரி அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி லாவண்யா, டாக்டர்கள் வெங்கடாஜலபதி, திருப்பதி, கருப்பையா மற்றும் பலர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X