'டாக்டர் சொல்வதை கேட்காதீங்க':அமைச்சர் 'அட்வைஸ்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டாக்டர் சொல்வதை கேட்காதீங்க':அமைச்சர் 'அட்வைஸ்'

Added : செப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை:''கர்ப்பிணிகளை இருந்த இடத்தை விட்டு நகராதீங்க என, டாக்டர்கள் கூறுவர். அவர்கள் கூறுவதை கேட்டால் அறுவை சிகிச்சை தான் செய்யனும். இதனால் அவர்கள் சொல்வதை கேட்காதீங்க,'' என சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கை, கல்லல் ஒன்றியங்களைச் சேர்ந்த 280 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை வழங்கி பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 1,720 கர்ப்பிணிகளுக்கு 4.30 லட்சம் ரூபாயிலான சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த காலத்தில் கிராமங்களில் கர்ப்பிணிகளை 'மருந்து குடிக்க' கூட்டி வந்ததாக கூறுவர். அது வீட்டிற்கு கூட தெரியாது. தற்போது வளைகாப்பை சிறப்பாக நடத்துகின்றனர். வசதி இல்லாதோர் வருத்தப்படக்கூடாது என்பதற்காக சமுதாய வளைகாப்பு நடத்துகின்றனர்.
கர்ப்பிணிகளை இருந்த இடத்தை விட்டு நகராதீங்க என, டாக்டர்கள் கூறுவர். அவர்கள் கூறுவதை கேட்டால் அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும். இதனால் டாக்டர்கள் கூறுவதை கேட்காதீங்க. எப்போதும் போல் வேலைகளை செய்யுங்கள்; கனமான பொருட்களை மட்டும் துாக்க கூடாது, என்றார். கலவை சாதம் வழங்கப்பட்டது.மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜான்சிராணி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) கீதா, கூட்டுறவு பண்டகசாலை சங்கத் தலைவர் ஆனந்தன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-201813:02:45 IST Report Abuse
ஆரூர் ரங் டாக்டர்ன்னா டாக்டர் ஜெயல்சலிதாவா டாக்டர் எம்ஜியாரா? நீங்க ரெண்டுபேர் பேச்சையுமே இப்போ கேக்கிறதில்லசியே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X