தற்காலிக பட்டாசு கடை: விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக பட்டாசு கடை: விண்ணப்பம் வரவேற்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் உரிமம் பெற, செப்., 28 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008 பிரிவு 84 ன் படி வசிப்பிடங்களில் இருந்து 50 மீ., துாரத்தில் பட்டாசுக் கடைகள் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொன்றுக்கும் 3 மீ., இடைவெளி இருக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் மூலம் கடைகள் அமைக்க வேண்டும். கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், தற்போதைய விண்ணப்பத்துடன், பழைய உரிமம் நகலையும் இணைக்க வேண்டும்.
ஐந்து விண்ணப்பங்கள், அத்துடன் கடை வரைபடம், மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு, மனுதாரர் கடை வைக்கும் இடத்தின் உரிமையாளராக இருப்பின், அதற்கான ஆவணங்கள், நடப்பு நிதி ஆண்டு வரை செலுத்தி வீட்டுவரி ரசீது நகல் இணைக்க வேண்டும். உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், பத்திர நகல், வீட்டுவரி ரசீது நகல், கட்டட உரிமையாளரிடம் 20 ரூபாய் பத்திரத்தில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தம் ஆகியவை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்க வேண்டும். தகுதியான விண்ணப்பதார்களுக்கு அக்., 20 க்குள் உரிமம் வழங்கப்படும் என, கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X