ஆசிரியர் தின போட்டி:படைப்புகள் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தின போட்டி:படைப்புகள் வரவேற்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள், மக்களுக்கு ஆசிரியர் தின கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. ஆறு முதல் பிளஸ் 2 வரை பள்ளி மாணவர்கள் 'இது எங்கள் வகுப்பறை,' தலைப்பில் எழுத வேண்டும். கல்லுாரி மாணவர்கள் 'என் கனவு,' என்ற தலைப்பிலும், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் 'கல்வியில் தொழில்நுட்பம்,' என்ற தலைப்பிலும், மக்கள் 'அசத்தும் அரசுப் பள்ளி,' என்ற தலைப்பிலும் எழுத வேண்டும். கட்டுரையை ஏ4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒன்று மட்டுமே அனுப்ப வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு சான்று வழங்கப்படும்.
முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்பை செப்., 20 க்குள் புலவர் கா.காளிராசா, ஆசிரியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 307 தமிழ்குடில், கொல்லங்குடி, அழகாபுரி, சிவகங்கை மாவட்டம் 630556 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் சாஸ்தாசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X