முன் விரோதத்தில் தாக்குதல்:10 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன் விரோதத்தில் தாக்குதல்:10 பேர் மீது வழக்கு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி;காரைக்குடி வெங்கடாசலம் செட்டியார் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 13-ம் தேதி அன்னதானம் நடந்துள்ளது. அப்போது பனந்தோப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் டூவீலரில் வேகமாக வந்துள்ளனர். இதை, நா.புதுாரை சேர்ந்த குமார் மகன் சுதாகர்,18. மற்றும் அவரது நண்பர்கள் தட்டி கேட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் பிரச்னை எழுந்துள்ளது.
ஆத்திரமடைந்த இளைஞர்கள், 14-ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுதாகரும் அவரது நண்பர்களும் விநாயகர் கோயிலில் நின்ற போது அவர்களை இரும்பு கம்பியால் தாக்கியும், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் சுதாகரின் நண்பர்களான வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த பூவரசன்,23, புது சந்தை ரோடு கணேசன் மகன் சபரீசன்,17, ஆகியோர் காயமடைந்தனர்.சுதாகர் புகாரின் பேரில், தெற்கு எஸ்.ஐ.அதிகுந்தகண்ணன் தாக்குதலில் ஈடுபட்ட பனந்தோப்பை சேர்ந்த குணா, செல்வா, பிரதாப், ராமு, சூர்யா, ராஜகணேஷ், சரவணன், பூலான், கணேசன், ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X