அனுமதியில்லாமல் திறந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிப்பேட்டை கிராம பெண்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியில்லாமல் திறந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிப்பேட்டை கிராம பெண்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்தியாத்தோப்பு: ஆயிப்பேட்டை கிராமத்தில் திடீரென திறந்த டாஸ்மாக் கடைக்கு, எதிர்ப்பு தெரிவித்து அக் கிராம பெண்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் திடீரென டாஸ்மாக் கடையை திறந்தனர். தகவல் அறிந்த கிராம பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கடையை முற்றுகையிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதில், கிராம இளைஞர்கள், முதியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியில் செய்தனர். தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.இதனை மறுத்த இளைஞர்கள், கடை திறப்பதால் வாலிபர்கள் மதுவிற்கு அடிமையாகி சண்டை சச்சரவுகள் அதிகமாகி வாழ்க்கையே பாழாகும் நிலை உருவாகும் நிலை உள்ளதால் டாஸ்மாக் கடை வேண்டாம் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஒரத்துார் போலீசார் டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கும், சிதம்பரம் தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு தொலை பேசி மூலம் தகவல் கொடுத்தனர்.ஆனால் கிராம பெண்கள், இளைஞர்கள் நேற்று கடை முன்பு நெடுநேரம் திறக்க விடாமல் காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X