சுற்றுலா சென்ற இடத்தில் தாக்குதல் குமராட்சி பள்ளி ஆசிரியர் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா சென்ற இடத்தில் தாக்குதல் குமராட்சி பள்ளி ஆசிரியர் புகார்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்: சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிதம்பரம் அடுத்துள்ள குமராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி இரவு ஒரு வேனில் புறப்பட்டு ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பரிசல் பயணம் செய்து அடர்ந்த காட்டுப்பகுதியில் சமைத்து சிலர் உற்சாக பானத்துடன் சாப்பிட்டுள்ளனர்.அப்போது ஒரு ஆசிரியர் ரவிச்சந்திரனை அசிங்கமாக திட்டி கீழே தள்ளி முகத்தை மண்ணில் அழுத்தி தாக்கியுள்ளார். இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடினார்.உடன் இருந்தவர்கள் இருவரையும் விலக்கியுள்ளனர். ரவிச்சந்திரன் அவரிடம் இருந்து தப்பித்து காட்டு வழியாக தப்பி ஓடி சாலையை அடைந்தார்.உள்ளூர்காரர் ஒருவர் உதவியுடன் சிதம்பரம் வந்து சேர்ந்தார். ஆசிரியர்கள் சுற்றுலா சென்று இடத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பின்னர் சம்பவம் குறித்து பள்ளியில் இரு தரப்பையும் அழைத்து, தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் சங்க தலைவர் முன்னிலையில் சமாதானப்பேச்சு வார்த்தை நடந்தது.இது குறித்து ரவிச்சந்திரன் குமராட்சி போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் குமராட்சி போலீசார் சம்பவம் நடந்தது தங்கள் எல்லை இல்லை என கூறி அவரது புகாரை வாங்க மறுத்து விட்டனர்.காலாண்டு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், குமராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் ஒரே நாளில் விடுமுறை எடுத்து ஒகேனக்கல் சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதித்தது.நீண்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற பிரச்னைகள் அதிகளவில் ஏற்படுகிறது. ஆகவே கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X