இணையதள சேவை முடங்கியதால் 'நீட்' பயிற்சி மாணவர்கள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இணையதள சேவை முடங்கியதால் 'நீட்' பயிற்சி மாணவர்கள் ஏமாற்றம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுாரில் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் இணையதள சேவை முடங்கியதால் மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.மருத்துவ படிப்பில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக 'நீட்' பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, இணையதளம் மூலமாக வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில், வல்லாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி, கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி உட்பட 14 மையங்களில் 'நீட்' பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 215 மாணவியரும், 140 மாணவர்களும் பங்கேற்றனர்.கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 'நீட்' பயிற்சிக்காக நேற்று காலை 10:00 மணிக்கு மாணவர்கள் வந்தனர். இணையதள சேவை பாதிக்கப்பட்டதாக கூறி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X