மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்| Dinamalar

மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்

Added : செப் 18, 2018 | கருத்துகள் (102)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர் மோடி, மோடி சொத்து, வருமான வரி கணக்கு, ஆமதாபாத், மோடி வீட்டு மனை, நிரந்தர வைப்பு கணக்கு, மோடி வருமான வரி கணக்கு தாக்கல் , மோடி, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, மோடி சொத்து மதிப்பு, Prime Minister Modi, Modi property, income tax account, Ahmedabad, Modi home, fixed deposit account,Modi income tax account, Modi, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi asset value,

புதுடில்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட, ரூ.20 லட்சம் அதிகரித்து ரூ. 2.2 கோடியாக உள்ளது.

பிரதமர் மோடி, 2017 -18 ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த நிதியாண்டில், மோடியின் மொத்த சொத்து மதிப்பு, ரூ.2 கோடியாக இருந்தது. தற்போது ரூ.20 லட்சம் அதிகரித்து, ரூ.2.2 கோடியாக உள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஸ்டேட் வங்கியில் அவர் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கில், ரூ.11 லட்சம் உள்ளது. கடந்த ஆண்டும் இதே தொகை தான் இருந்தது. அவரது பெயரில் உள்ள நிரந்தர வைப்பு கணக்கில், கடந்த ஆண்டு ரூ.90 லட்சம் இருந்தது. தற்போது அது, ரூ.1.1 கோடியாக அதிகரித்துள்ளது.







நான்கு தங்க மோதிரங்கள்


இதுதவிர, ரூ.20,000 மதிப்புள்ள உள்கட்டமைப்பு நிறுவன பத்திரங்கள், ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ், ரூ.1.59 லட்சம் மதிப்புள்ள எல்.ஐ.சி., பாலிசி ஆகியவை உள்ளன. மோடிக்கு சொந்தமாக எந்த வாகனமும் இல்லை. அவரிடம் உள்ள தங்க நகைகள் விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. ஆமதாபாத் நகரில் 16 ஆண்டுகளுக்கு முன் மோடி வீட்டு மனை வாங்கினார். தற்போது அதன் மதிப்பு ரூ.1 கோடி. கடந்த ஆண்டு அவரிடம் ரொக்கமாக ரூ.1.5 லட்சம் இருந்தது. தற்போது அதில் 67 சதவீதம் குறைந்து ரூ.48,944 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
21-செப்-201803:33:23 IST Report Abuse
 nicolethomson இங்க கேள்வி கேட்கும் உரிமை உள்ள மக்கள் ஏனோ ராகுலை இந்த சொத்து விஷயத்தில் கேட்கவே இல்லை?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201815:44:35 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரசின் முன்னணித் தலைவர்களுடைய சொத்து மதிப்பு விபரத்தையும் வெளியிட்டால் மகிழ்வேன் .....
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
19-செப்-201812:41:14 IST Report Abuse
Narayanan Sakthi இதுவும் வருமான வரிதாக்கல் கணக்கு. அவரு வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்த செலவே பல இலட்சம் கோடி. அப்படி இருக்க இவரு பண முதலைக்கு கொடுத்ததே பல இலட்சம் கோடி அதில் உள்ள சலுகை?பெட்ரோல் டீசல் விலை உயர்வு - கைம்மாறு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X