திட்டவட்டம்! 'ரபேல்' ஒப்பந்த விவகாரத்தை பார்லி., விசாரிக்காது; காங்., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி Dinamalar
பதிவு செய்த நாள் :
திட்டவட்டம்! 
'ரபேல்' ஒப்பந்தத்தை பார்லி., விசாரிக்காது
காங்., குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி

புதுடில்லி : ''காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட,ரபேல் போர் விமானங்களை, 9 சதவீதம் விலை குறைத்து வாங்கி உள்ளோம். இந்த விவகாரம் குறித்து, பார்லி., கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.

ரபேல், ஒப்பந்த,விவகாரத்தை,பார்லி., விசாரிக்காது,திட்டவட்டம், காங்., குற்றச்சாட்டுக்கு, அமைச்சர், நிர்மலா,பதிலடி


'ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில், ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன' என, காங்., தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.'போர் விமானங்களைத் தயாரிக்கும் உரிமம், அரசின், எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்' நிறுவனத்துக்கு வழங்காமல், 'ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்' நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்டு உள்ளது' என, காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்நிலையில், ''எச்.ஏ. எல்., நிறுவனத்தை, ஒப்பந்தத்தில் இருந்து கழற்றிவிட்டது, முந்தைய, காங்., தலைமையில் இருந்த, ஐ.மு., கூட்டணி அரசு தான்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ராணுவ அமைச்சருமான, நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான, பிரான்சைச் சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன், 2012ல், பேச்சு துவங்கியது.

'முழுவதும் தயாரான நிலையில், 18 விமானங் களை, டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்க வேண்டும்; மீதி விமானங்களை,

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., நிறுவனத்துடன் இணைந்து, டசால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும்' என, திட்டமிடப்பட்டது.

இதுபற்றி, எச்.ஏ.எல்., நிறுவனத்துடன், டசால்ட் நிறுவனம் பேச்சு நடத்திய போது, எச்.ஏ.எல்., விமானங்களை தயாரிக்க, போதிய திறனை பெற்று இருக்கவில்லை என, உணர்ந்தது.மேலும்,இந்தியாவில் தயாரித்தால், ஒப்புக் கொண்டதை விட, செலவு அதிகரிக்கும் என்றும் கருதியது. இந்தியாவில் தயாரிக்க வேண்டுமானால், அதன் தரம் குறித்து, உத்தரவாதம் வழங்க வேண்டும்.உத்தரவாதம் வழங்க, எச்.ஏ.எல்., முன்வரவில்லை. இதனால், டசால்ட் நிறுவனம், பேச்சை தொடரவில்லை.

அத்துடன், 2013ல், செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு, இந்த பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்த போது, அப்போதைய ராணுவ அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, அந்தோணி தலையிட்ட தால், ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமலே போய்விட்டது.அவர் நினைத்திருந்தால், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, அதை பலப்படுத்தி இருக்கலாம்; ஆனால், செய்யவில்லை; இதற்கு, காங்., தான் பதிலளிக்க வேண்டும்.உதிரி பாகங்கள் வாங்க, தாமதம் ஏற்படுவது வழக்கம். சிறந்த விலை கிடைக்க செய்வதே, எங்களது பணி. முந்தைய ஆட்சியை விட, 9 சதவீதம் விலை குறைத்து, போர் விமானங்களை வாங்கியுள்ளோம். தொடர்ந்து பொய்களை கூறி வருவதால், அதுஉண்மையாகிவிடாது.

இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளோம். இந்த ஒப்பந்தம் குறித்து,பார்லி., கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு, நிர்மலா சீதாராமன் கூறினார்.

ரூ. 9,1௦௦ கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்


ராணுவத்திற்கு தளவாடங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காக, 9,100கோடி ரூபாயை ராணுவ அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. டில்லியில்,

Advertisement

ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ராணுவத்துக்கான ஆயுதங்கள் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நடந்தது. இதில், 9,100 கோடி ரூபாய் மதிப்புக்கு, ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூடுதல் விமானங்களை வாங்காதது ஏன்?



'முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட, குறைவான விலைக்கு, ரபேல் விமானம் வாங்குவது உண்மை என்றால், கூடுதல் விமானங்கள் வாங்காதது ஏன்?' என, காங்., மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான, ஏ.கே.அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில், அவர் கூறியதாவது: விமானப் படைக்கு, 126 விமானங்கள் வாங்க வேண்டும் என, 2,000ம் ஆண்டிலேயே மதிப்பிடப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின், தற்போது சூழல் அதிகம் மாறியுள்ளது.எல்லையில், அதிகமான ஆபத்து உள்ளது. இந்த சூழலிலும் வெறும், 36 விமானங் கள் மட்டுமே வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

காங்., ஆட்சியை விட, 9 சதவீதம் விலை குறைவாக வாங்கப்படுவது உண்மை என்றால், கூடுதல் விமானங்களை வாங்காதது ஏன்? நாட்டின் பாதுகாப்பில், மத்திய அரசு சமரசம் செய்து கொள்கிறது. இவ்வாறு, அந்தோணி கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
20-செப்-201804:29:55 IST Report Abuse

AnandanHAL ஐ வலுப்படுத்தவில்லைனு காசிமணி அரூர் ரங் போன்ற விஞ்ஜானிகள் சொல்லிட்டாங்க ஏன் இந்த நாலரை வருடத்தில் யோக்கியவான்கள் கட்சி அதை செய்யவில்லை?

Rate this:
Santhanam - chennai,இந்தியா
20-செப்-201801:15:51 IST Report Abuse

Santhanamபத்து வருஷமா வாங்காதவன் இப்போ வந்து அட்வைஸ் பண்றான், இப்போ ஆபத்து அதிகமா இருக்குனு? 2000 லேயே வாங்கணும்னு முடிவு பண்ணிட்டு 10 வருஷமா என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?

Rate this:
Anandan - chennai,இந்தியா
21-செப்-201807:23:25 IST Report Abuse

Anandan136 வாங்க திட்டம் போட்டப்ப முட்டை கட்டை போட்டுட்டு இப்போ 32 மட்டும் வாங்குபவன் திறமைசாலின்னு கூவுறாங்க. அதுக்கு பேறு இன்னா?...

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-செப்-201800:17:39 IST Report Abuse

Mani . Vபிளீஸ், போட்டோ வேண்டாமே

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X