தகவல் திருட்டை ஏற்க முடியாது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
தகவல் திருட்டை ஏற்க முடியாது :
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை

புதுடில்லி : ''தகவல்களை திருடுவது, தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது; கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,'' என, மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

தகவல் திருட்டு, ஏற்க முடியாது ,மத்திய ,அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எச்சரிக்கை


பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' என்ற, தகவல் ஆய்வு நிறுவனம், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் இருந்து, 8.7 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடி யதாக குற்றச் சாட்டு எழுந்தது.

நடவடிக்கை


இந்த தகவல்கள்மூலம்,பலநாடுகளில், தேர்தல்

முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டு, தகவல் திருட்டைத் தடுக்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இந்தியர்களின் தகவல்கள்திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் ஆகிய நிறுவனங்களுக்கு, சி.பி.ஐ., சமீபத்தில்,கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சரும், பா.ஜ.,மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

தகவல் ஆய்வுகளின்மையமாக செயல்படுவதற்கு, இந்தியா தயாராக உள்ளது.அதே நேரத்தில், இந்தத் தகவல் களின் மூலம், இந்தியாவின் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால்,அதை ஏற்க முடியாது. கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தொடர்பாக, முன்னாள் நீதிபதி, பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

குற்றம்


அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படை யில், வரைவு மசோதா தயாரிக்கப் பட்டு உள்ளது.இந்த மசோதாவின் படி, இந்தியர்களின் தகவல்களை கையாளும் நிறுவனங்கள், அவற்றை தவறாகப் பயன் படுத்துவது, மற்ற வர்களுக்கு அளிப்பது போன்றவை குற்றம்.மீறி ஈடுபட்டால், 15 கோடி ரூபாய் அல்லது அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாயில், 4 சதவீதம், அபராதமாக விதிக்கப்படும்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-201821:31:43 IST Report Abuse

Pugazh Vதகவல்தொடர்பு ஒழுங்குமுறை இயக்குனரின் தகவல்களையே திருடிட்டு அதை பகிரங்கமாக நிரூபிக்கவும் செய்தார்கள். அப்போது, ஆதாரை அதோட இணைக்கவோ இதோட இணைக்கவோ நாங்க சொல்லல என்று ஜகா வாங்கினார்கள். ஆதார் இல்லன்னா அரிசி கோதுககூட கிடையாது.. ரேஷன் கடைல இணைக்க சொன்னார் கள். என்ன வோ சூப்பர் மார்கெட்டில் நம்பர் குடுத்தா தப்பு ங்கறார். உங்கள் டெபிட் கார்டை குடுத்ததுமே உங்கள் சரித்திரம் பூகோளம் ஜாதகம் எல்லாமே அவர்களிடம் போய்விடும்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-செப்-201815:33:40 IST Report Abuse

ஆரூர் ரங்சமீப காலங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பில்போடும் போது பெயர் மொபைல் எண் கேட்கிறார்கள் .படித்த ஆறிவாளிகள்கூட சிறிதும் யோசிக்காமல் விவரங்களைக் கொடுக்கிறார்கள் .சில கடைகளில் இன்னும் மேலேபோய் மெம்பர்ஷிப் கார்டு வாங்குங்க ஒரு பர்சென்ட் தள்ளுபடி உண்டு என்கிறார்கள் படித்த . மக்களும், எல்லாவிவரங்களையும் அந்த ஒரு சதவீத தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு கொடுக்கிறார்கள் . அரசு என்னசெய்தாலும் குறை சொல்பவர்கள் கவனிக்கவும் / வெகு சிலரே பாதுகாப்பான பரிமாற்றத்தை அறிந்திருக்கிறார்கள் செல்போன் கம்பெனிகள் மட்டுமல்ல இலவச ஆப்ஸ் கொடுப்பவர்களும் ஆப்ஸ் இன்ஸ்டால் பண்ணும்போதே உங்கள் மொபைலிலுள்ள விவரங்கள் அனைத்தையும் பார்த்துப் பயன்படுத்த அனுமதியாதவர்கள் யார் ?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-201811:30:05 IST Report Abuse

Pugazh Vஎந்த செய்தியில் என்ன பேசுகிறார்கள். மதம் இதில் எங்கே வந்தது? இந்த மதவாதம் ஒன்றைப் பிடித்துக்கொண்டு அதன் மூலம் வன்முறை, கலவரம், பிரிவினை - இப்படி எதியயாவது உருவாக்கி, தூத்துக்குடியில் செய்தது போல ஒரு பத்து பேரை போட்டு தள்ளப் பார்க்கிறார்களா? தகவல்களை திருடினால் ஏற்க முடியாதாம். ஏற்காதீர்கள், யார் ஏற்க சொன்னது? கடும் நடவடிக்கையா? என்ன அது? ஐந்து நட்சத்திர ஓட்டலாக மாற்றிய டெல்லி சிறையில் போடுவீர்களா? 4 % அபராதம் போட்டவுடன் அவங்க கட்டிடுவாங்க அதை எடுத்துக்கிட்டு உலகம் சுற்றலாம் என்று பார்க்கிறார்களா? உள்ளூர் இன்போசிஸ் மீது சில கோடிகளில் விதித்த அபராதத்தையே இன்னும் பத்து ரூபா கூட வசூலிக்க முடியல. அயல்நாட்டு கம்பெனியின் மொத்த வருமானத்தை எப்படி கண்டுபிடித்து அதில் 4 % வாங்குவார்களாம்? நடைமுறைக்கு ஒவ்வாத அறிவிப்புகள், பொய்கள், மக்கள் விரோத செயல்கள் இவை தான் பிஜேபி அரசு.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X