கரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கரன்சி எண்ணுவோர் கம்பி எண்ணுவர்
தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

சேலம்: ''ஊழலுக்கு துணை போகும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை தயாரித்து, கண்காணித்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரன்சி எண்ணும் அனைவரும் கம்பி எண்ணுவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கரன்சி ,எண்ணுவோர் ,கம்பி, எண்ணுவர் ,தமிழக, அரசுக்கு ஸ்டாலின், கடும் ,எச்சரிக்கை


அ.தி.மு.க., அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும், தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் ஆர்ப்பாட்டத்தில்,கட்சி தலைவர், ஸ்டாலின் பேசியதாவது:


தமிழகத்தில் ஊழல் அரசாக, அ.தி.மு.க., மாறி விட்டது. இத்தகையஊழலை, இதுவரை கண்டதில்லை. ஊழல்வாதிகளுக்கு போட்டி நடத்தினால், முதல்வர், பழனிசாமி வெற்றி பெறுவார். 33 அமைச்சர்களும் ஊழல் கறை படிந்தவர்கள்.ஊழல் பணத்தில், மத்தியஅரசுக்கு கப்பம் கட்டுகின்றனர் என, பகிரங்கமாக குற்றம்

சாட்டுகிறேன். நான், கருணாநிதியின் மகன். தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.

நெடுஞ்சாலைத் துறையில், 3,210 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை, முதல்வரின் உறவினர்களுக்கு வழங்கியதில் நடந்துள்ள, கோடிக் கணக்கான ஊழல் குறித்து, எந்த நடவடிக்கையும் இல்லாததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தோம். ஊழலுக்கு துணை போகும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை தயாரித்து, கண்காணித்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரன்சி எண்ணும் அனைவரும் கம்பி எண்ணுவர்.

லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கிய தமிழக அரசு, அதற்கான தலைவரை நியமித்தால், முதலில் சிறை செல்வது, முதல்வர் பழனிசாமி தான். இந்த ஆட்சியை அகற்றும் வரை, போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டம் முடிந்து, பகல், 11:50 மணிக்கு காரில், ஸ்டாலின் சேலம் விமான நிலையம் வந்தார். அங்கு, அவர், சென்னை செல்வதற்காக, சிறிய ரக தனி விமானம் தயாராக இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர், ஜெகத்ரட்சகனுடன், மதியம், 12:05 மணிக்கு விமானத்தில் ஸ்டாலின் புறப்பட்டார்.

'கரப்ஷன் கிங்' பட்டம்


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடந்த

Advertisement

ஆர்ப்பாட்டத்தில், கனிமொழி, எம்.பி., பேசிய தாவது:தமிழகத்தில்ஏற்பட்ட புயல், வெள்ளத்தை விடவும், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியது.


தற்போது தமிழகத்தில் நடைபெறும், அ.தி.மு.க., ஆட்சி. போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. குப்பையில் கூட ஊழல் நடக்கிறது. முதல்வர், பழனிசாமிக்கு, 'கரப்ஷன் கிங்' பட்டம் கொடுத்து, பாராட்டு விழா நடத்தலாம்.அந்த அளவிற்கு இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது.

முதல்வர் வகிக்கும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மக்கள் ஓட்டு போட்டு, முதல்வர் பதவிக்கு வரவில்லை. விபத்தால் முதல்வரானார்.தமிழக மக்களின் உயிரை பறிக்க கூடிய குட்கா விற்பனை குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை, தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.


மத்தியில் ஆளும், பா.ஜ., ஆட்சியை பற்றி எதிர்த்து கேள்வி கேட்ட தமிழக அரசிற்கு துணிவில்லை. இந்த நிலை மாற, தமிழகத்தில் மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும்; ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (101+ 58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-201812:55:56 IST Report Abuse

ராஜேஷ் (ஏனாதி பட்டுக்கோட்டை )வருமானத்துக்கும் அதிகமா சொத்து இருந்த பறிக்கும் வருமான வரித்துறை . ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி திமுகவின் வருமானத்தை கணக்கிட்டால் இன்று அவர்கள் தெருவில்தான் நிக்கணும் ..எல்லாரும் கூட்டுக்களவானிகள்தான் என்று எங்களுக்கு தெரியும் .

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-செப்-201802:31:55 IST Report Abuse

Manianநைனா மாதிரி எல்லாத்தையுமே வெளிநாட்டு கரஞ்சியாக ஹவாலா மூலம் மாற்றினதை நான் சொல்லவில்லை. அதை வெறும் போட்டொவிலேதான் காட்டினாங்க. அதையும் எரிச்சுட சொன்னார். நைநா மாதிரி லஞ்சத்தை இனிமேல் யாருமே செய்ய முடியாது என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. நூற்று தலைமுறைக்கு இப்படி சேராத இவருக்கு மகாராஜா கருணா என்று பெயர் கிடைக்க வில்லையே பாரத லஞ்ச ரத்னா என்றாவது பிரிச்சிடேன்ட் கோவிந்த ஒரு விருத தருவாரா? இதற்கு நோபல் பரிசு கூட தரலாமே கடல் கரையில் உறங்கி இந்த செய்திய கேட்டு திரும்ப உயிர்த்தெழுவார் என்பதை அய்யமில்லை.

Rate this:
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
20-செப்-201812:40:06 IST Report Abuse

R.CHELLAPPAScientific ஊழல் செய்பவர்கள் கம்பி எண்ணுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்ல வருகிறார்.

Rate this:
மேலும் 98 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X