'குட்கா' ஊழல் விவகாரம்: அமலாக்க துறையும் தயாராகிறது Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'குட்கா' ஊழல் விவகாரம்
அமலாக்க துறையும் தயாராகிறது

சென்னை: 'குட்கா' ஊழல் விவகாரம் குறித்து சி.பி.ஐ.,யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.

குட்கா,ஊழல், விவகாரம்,அமலாக்க,துறையும்,தயாராகிறது


சென்னையைச் சேர்ந்த மாதவ ராவ் என்பவர் செங்குன்றம் அருகே சட்ட விரோதமாக குட்கா ஆலை மற்றும் கோடவுன் நடத்தினார். இதன் பங்குதாரர்களாக உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் இருந்தனர்.இவர்கள் தமிழகத்தில் 2013ல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து மாநிலம் முழுவதும் 'சப்ளை' செய்து கோடிகளை குவித்து வந்தனர்.

அதற்கு கைமாறாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன்,
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு,

கோடிக் கணக்கில் லஞ்சம் தரப்பட்டதாக கூறப் படுகிறது. அதேபோல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோ ருக்கும், 'குட்கா' பணம் கைமாறி உள்ளது.

இது குறித்து வருமான வரி அதிகாரிகள் விசாரித்து மாதவ ராவிடம் வாக்குமூலம் பெற்று உள்ளனர்; லஞ்சஒழிப்பு போலீசாரும் வழக்குப் பதிந்து உள்ளனர்.இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப் பட்டு, செப்., 5, 6ல், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட, 40 இடங்களில், சோதனை நடந்துள்ளது.

அதனடிப்படையில், மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள், செந்தில்முருகன், பாண்டியன் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, காவலில் எடுத்துவிசாரித்தனர். அப்போது, அமைச்சர், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு,லஞ்சம் கொடுத்தது உண்மை என, மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோர், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளனர்.

இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணையை தொடர்ந்து, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளும், விரைவில், இவ்விவகாரத்தில் விசாரணையில்

Advertisement

ஈடுபட உள்ளனர். அதற்காக, குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, வலது கரமாக செயல்பட்டு, உள்ளடி வேலை பார்த் தோர் பற்றிய விபரங்களை திரட்டி உள்ளனர்.

மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் மீது வழக்குப் பதியவும், அமலாக்கத் துறை முடிவு செய்து உள்ளது.இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியோர்,சட்ட விரோதமாக, வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்துள்ள தகவல் கிடைத்துள்ளது. விரைவில், விசாரணை துவங்க உள்ளது'என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201818:13:11 IST Report Abuse

ஆப்புகுட்காவாவது...குந்தானியாவது...குற்றவாளிகளைப் பிடிக்க இவிங்களால் முடியாது...தண்டிக்க கோர்ட்டால் முடியாது....

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
19-செப்-201812:45:40 IST Report Abuse

sahayadhasஎல்லா குற்றங்களின் தொடக்கங்கள் மட்டுந்தான் படிக்க முடிகிறது , முடிவு என்னனு தான் தெருஞ்சுக்க முடியல.

Rate this:
19-செப்-201809:55:00 IST Report Abuse

ருத்ராஇவ்வளவு தாமதம் செய்தே 2ஜி வெளிய. குட்காவின் புகையும் அடங்கி விடும்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X