தி.முகவிற்கு எதிராக வரும் 25-ம் தேதி பொது கூட்டம் : அ.தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.முகவிற்கு எதிராக வரும் 25-ம் தேதி பொது கூட்டம் : அ.தி.மு.க.,

Updated : செப் 19, 2018 | Added : செப் 19, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 திமுக ,பொதுகூட்டம், அ.தி.மு.க., முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: வரும் 25-ம் தேதி தி.மு.க.,விற்குஎதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொது கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தி.மு.க.,விற்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுகூட்டம் நடத்தப்படும். இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த காங்கிரஸ் திமுகைவை தண்டிக்க வேண்டும். இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க.,காங்கிரஸ் உதவியதை ராஜபக்ஷே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், இலங்கை தமிழர் படுகொலையில் தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி கண்துடைப்பிற்காக உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவுவிழாவில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
20-செப்-201806:30:10 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy சமீப காலமாக கருணாவை 'இந்திரன் சந்திரன் ' என்று புகழ்வதை காண்கிறோம் .பழனிசாமியை பரிகாசம் செய்கிறார்கள் ,ஏன் என்றால் அவர் தமிழர் .இதே பன்னீருக்கு பொருந்தும் .பழனிசாமி செய்ய வேண்டியது ' கருணாவின் துரோகங்கள் பற்றி . காமராசரை இழிவு படுத்தியது ,வரை லஞ்ச வாதி என்றது 'குடி 'என்றால் என்ன என்று தெரியாத தமிழகத்தில் 'குடியை திணித்து இன்று அந்த குடி பூதாகரமாக வளர்ந்தது இந்தியை [ தன குடுமபத்தினரை தவிர்த்து ] மற்றவர்களை தடுத்து தமிழர்களின் வாழ் வாதாரத்தை அழித்தது. தான் டொக்டர் பட்டம் பெற நடத்திய செயல்கள் இந்து மத விரோத மனப்பாங்கு ,பராசக்தி மூலம் இந்து மதத்தை அவமதித்தது [ இப்போது கிருத்துவ இஸ்லாமிய மத ரகசியங்கள் வந்து கொண்டு உள்ளன] இலங்கை தமிழரை கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொன்ற ராஜபக்சேக்கு மறைமுக உதவி மன்மோஹனுடன் சேர்த்து கொண்டு அந்த மன்மோகன் தன சீக்கியர்களை காங்கிரஸ் கொன்றதைப்பற்றி மன்னிப்பு கேட்டார் அது அவரது இனப்பற்றை காட்டுகிறது. ஆனால் நம் ' தமிழ் காவலனோ ??? என்ன செய்தார் ' நான்கு மணி நேரம் உன்ன நோம்பு வேடிக்கை அய்யா நெஞ்சு போர்க்கவில்லையே . மற்றும் தலையாகியது 'வாரிசு அரசியல் ,தன வாரிசுகளை உலக பணக்கார லிஸ்ட்டில் சேர்த்தால் .....தமிழ விழித்து ஏழு திராவிடம் என்ற போர்வையில் தமிழன் நசுக்க படுகிறான் . எல்லா திராவிடதங்களும் ஒன்று சேர்ந்து விட்டனர் [ வை கோ உள்பட ] தமிழா நீயும் உன் இனப்பற்றை காண்பி ஏன் என்றால் எந்த ஒரு மலையாளியோ கன்னடத்தானோ தெலுங்கனோ 'தன்னை திராவிடன் என்று அவர்கள் மாநிலங்களில் கூறிக்கொள்வதில்லை ' தமிழகத்தில் மட்டும் இந்த நாடகம். திராவிடர்கள் வாழட்டும் ஆனால் 'தமிழனும் வாழ் ,வளர் . ஆழ ' வழிவிடட்டும்
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
20-செப்-201808:08:58 IST Report Abuse
Panneerselvam Chinnasamyபழனிச்சாமி எவ்வளவு தமிழரோ, அதே அளவிற்கு கலைஞரும் தமிழரே.. அவர் உணர்வாலும் உயிராலும் மண்ணின் மைந்தர்... எங்கோ பிறந்து MGR , ஜெயலலிதா போல் இங்கு பிழைக்க வந்தவரல்ல.. இப்போது பிரச்சினை அதுவல்ல ..யார் தமிழகத்தில் நல்லாட்சி தருவார்கள் என்பதுதான் பிரச்சினை... உங்கள் கேள்விகளுக்கு எனது பதில் : 1)திமுக ஆட்சி காலத்தில் காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பெயரை பல சாலைகளுக்கும் ,விமானநிலையங்களுக்கும் வைத்து பெருமை படுத்தினார்கள் பழனிசாமி என்ன செய்தார்?. 2 ) தமிழகத்தில் குடி என்றால் என்னவென்றே தெரியாது தி முக தான் குடியை பழக்கினார்கள் என்னும் தங்கள் வாதம் முற்றிலும் தவறு...சங்க காலத்திலேயே தமிழர்கள் மதுவை அருந்திவந்தார்கள்... முந்நீர் வழக்கம் (COCK TAIL OF PALM,COCONUT AND DATE TODDY) சங்க கால இலக்கியத்திலேயே பேசப்படுகிறது ... அதனால்தான் முனீஸ்வரனுக்கும், கருப்பண்ண சாமிக்கும், அய்யனார் பரிவாரங்களுக்கும் மதுரை வீரனுக்கும் இன்றும் மதுவை படைக்கிறோம்.. 1937 -இல் முதல்வர் பதவி ஏற்றபின் (Provincial government under British rule ) ராஜாஜி மதுவிலக்கை அமுல் படுத்தினார். அவ்வாறு தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த அறுபதுகளில், பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாது இருந்தது, தமிழக இளைஞர்கள் பாண்டிக்கும், பெங்களூருக்கும் வார இறுதி நாளில் படையெடுத்து போவார்கள். கள்ள சாராயமும் அங்கங்கே காய்ச்சிக் குடித்துக்கொண்டுதான் கொண்டுதான் இருந்தார்கள்... அதைப்பார்த்து கலைஞர் ஆட்சியில் 1971-இல் சோதனை அளவில் மது, கள்ளு கடைகளை அனுமதித்தார். ஆனால், அதனால் ஏற்படும் சமூக அவலங்களை பார்த்து 1974 இல் மீண்டும் மதுவிலக்கை அமுல் படுத்தினார்... ஆனால் கள்ள சாராயத்தினால் ஏற்படும் சாவுகள், கள்ள சாராய ரௌடியிசத்தை குறைக்க 1981-இல் MGR ஆட்சியில் மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்டன... பக்கத்தில் வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் அந்த காலகட்டத்தில் மதுக்கடைகள் இருந்தன.. இது இந்தியா தழுவிய பிரச்சினை... திமுகவை மட்டும் குறை சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? 3)"மற்றவர்களை தடுத்து வாழ்வாதாரங்களை அழித்து....?"3 ) வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்து சொல்லக்கூடாது... திமுக ஆட்சி காலத்தில்தான் தொழில் வளர்ச்சி அதிகம் இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் சொல்லும்... இப்போது அதிமுக ஆட்சியில் கடந்த ஒரு வருடத்தில் gst ஆல் 50,000 சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர்களே சட்டசபையில் சொல்லி இருக்கிறார்கள்...இதற்க்கு இந்த அரசு ஏதாவது பரிகார நடவடிக்கை செய்ததா? இதே இடத்தில் கலைஞர் இருந்திருந்தால் ஒரு வழி கண்டு துயர் துடைத்திருப்பார்... 4 )ஈழவிடுதலைக்கு போராடிய இயக்கத்தையே பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியது யார்? கலைஞரா? இதுதான் பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பது. ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் திமுக LTTE இடமிருந்து சற்று விலகியே இருந்தது ... எப்படி மகாத்மா காந்தி சுபாஷ் சந்திர போஸிடம் இருந்து விலகி இருந்தாரோ அதுபோல்...கொலைப்பழியால் LTTE அதன் நண்பர்களை இழந்து இறுதியில் தோல்வியை தழுவியது... ஆனாலும் காங்கிரஸ் திமுகவிடம் வெளிப்படையாக இல்லையென்பதால் பின்னர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியது... போர்க்குற்றவாளியாக ராஜபக்சேயை அறிவிக்க வலியுறுத்தியது...போரில் இப்படி நடக்கும் என்பதை யாரால் முன்கூட்டி சொல்லமுடியுமா ? வீண்பழி போடுவதைவிட்டு உண்மைநிலை உணருங்கள்... 5 )MGR மறைவிற்கு பின் ஜானகியையும் ,ஜெயலலிதாவையும் தலைவர்களாக ஏற்று கொண்டதுதான் வாரிசு அரசியல்... ஸ்டாலின் ஐம்பது ஆண்டுகள் கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புக்கள் வகித்து பல போராட்டங்களில் ஈடுபட்டு ,மிசா வில் கொடுந்தண்டனை எல்லாம் அனுபவித்த பின்தான் தலைவர் ஆகி உள்ளார்..6 ).கலைஞர் கடின உழைப்பாளி... உழைப்பால் உயர்ந்தவர்... அம்மையார் ஜெயலலிதாகூட அவர் மீது களங்கம் கற்பிக்க கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு பூதக்கண்ணாடி போட்டு பார்த்தும் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாமல் பொய் வழக்கு போட்டு மூக்குடைபட்டார்கள்..7 ).திராவிடம் என்பது இனம் ... தமிழ் என்பது நம் மொழி... மொழி வழக்கு குமரி தமிழுக்கும், கொங்கு தமிழுக்கும் ,சங்க தமிழுக்கும் ,மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னை தமிழுக்கும் மாறுபட்டிருந்தாலும் இன உணர்வு எப்படி மாறுபடுவதில்லையோ அது போல்தான் இனத்தையும் வழக்காடு மொழியையும் முடிச்சு போடுவது ...?...
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
20-செப்-201804:15:52 IST Report Abuse
Panneerselvam Chinnasamy LTTE ஐ பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்கள் விழா எலும்பை உடைத்தது அம்மா அரசு... கலைஞர் அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201803:46:53 IST Report Abuse
ManiS oru edhir katchikku ediraa aalum katchi poraattam nadathudhaam... idhu periya asingamnu ungalukke theriyanum. Adhu sari, ungalukku yosikave theriyaadhe. poi pulls kuttigalayaavadhu padikka vaingadaa. Ungala thitradhu padicha engalukkku asingam. DMK kum ungalukkum vote podra indha mutta thamizh makka irukkara vara neengadhaan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X