'நக்சல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதா?' Dinamalar
பதிவு செய்த நாள் :
'நக்சல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதா?'

ராய்ப்பூர்:''பிரதமரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டும் நக்சல் ஆதரவாளர்களை, ராகுல் ஆதரிக்கிறார்,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

நக்சல்,ஆதரவு,ராகுல்,அமித் ஷா,தெரிவிப்பதா?


நக்சல்களுடன் நேரடி தொடர்பில் இருந்த, தெலுங்கானாவைச் சேர்ந்த வரவர ராவ் உட்பட, ஐந்து பேரை, மஹாராஷ்டிர மாநில போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். தற்போது, அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த,பா.ஜ., கூட்டத்தில், அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாபேசியதாவது:ராஜஸ்தான், ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு, இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறப் போவதாக, காங்., தலைவர் ராகுல், பகல் கனவு காண்கிறார்.

இந்த மூன்று மாநிலங்களிலுமே, நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய, சதி திட்டம் தீட்டும் நக்சலைட் ஆதரவாளர்களை, ராகுல் ஆதரிக்கிறார்; அவர்களுக்கு ஆதரவாக பேசிவருகிறார்.

வேடிக்கை


இந்த விஷயத்தில், ராஜஸ்தான், ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மக்களுக்கு,ராகுல், தன் நிலையை

Advertisement

தெளிவாக விளக்க வேண்டும். எல்லையில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, காங்., அரசு, அதை வேடிக்கை பார்த்தது. ஆனால், பா.ஜ., ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்த போது, நம் வீரர் கள், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தி, பயங்கரவாதி களை விரட்டி அடித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
22-செப்-201820:15:58 IST Report Abuse

துயில் விரும்பிஇந்த நாடு வயதான அரிசியால் வியாதிகளால் நாசமாகிக் கொண்டு இருக்கிறது. வயது வரம்பு 60 ஆக்க வேண்டும். இவர்கள் நாட்டை பல வழிகளில் மாசு படுத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்

Rate this:
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
22-செப்-201818:34:49 IST Report Abuse

ANANDAKANNAN Kநக்சல் தீவிரவாதிகள் அதிகம் உள்ள மாநிலம் ஆந்திர,தெலுங்கானா, சட்டிஸ்கர்,பீகார்,மேற்கு வங்கம்,அசாம் போன்ற மாநிலங்கள், இங்கு வசிக்கும் மக்கள் படும் வேதனைக்கு அளவுகள் இல்லை, இந்த அமைப்புகளுக்கு சில வெளிநாட்டு தீய சக்திகள் ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்கின்றன, மேலும் உள் நாட்டில் இருக்கும் சில தொண்டு நிறுவனங்கள் பணம்,கள ஆய்வுகளை மற்றும் அரசியல் சார்ந்த சலுகைகளை பெற செய்கின்றன, இவர்கள் வளர காரணம் சுயநலம் மிக்க அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு ஆதரவலாளர்களுமே, இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போதுதான் இவர்கள் உருவாக்கப்பட்டன, திரு.ராஜிவ் பிரதமராக இருக்கும் போது இவர்களை அடியோடு அளித்து இருக்கலாம் ஆனால் செய்யவில்லை, மேலும் இவர்களை வைத்து அரசியல் எதிரிகளை மர்மமாக கொலை செய்தனர். அதே தீவிரவாதிகளால் இந்திரா மற்றும் ராஜிவ் கொல்லப்பட்டனர், அமைப்புகள் மட்டுமே வேறு ஆனால் தீவிரவாதிகள்தான். இதை மனதில் வைத்து திரு.ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மாறவேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-செப்-201814:15:05 IST Report Abuse

Pugazh Vகடந்த ஆட்சியில் இந்த நக்சல் என்ற வார்த்தையை கேட்டது கூட இல்லை. இவர்கள் வந்த பிறகு தான் கேட்கிறது. இன மத மொழி ஜாதிப் பிரிவினைகளை பீஜேபீ தூண்டி வருவதால் நக்சல் மீண்டும் உருவாகிறார்கள் போலிருக்கிறது

Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
22-செப்-201821:33:36 IST Report Abuse

Young Prince@புகழ் ... உங்களுக்கு விழுந்த ஸ்டார் ரேட்டிங் பார்த்தே நீங்க தெரிந்து கொள்ளலாம் நீங்க பேசறது சுத்த பேதல்னு. சும்மா எதாவது பதிவு போடணும்னு போடறீங்க இல்லேன்னா நல்ல மூளை சலவை செய்யப்பட்டிருக்கீங்க. இப்படி கூட ஒருத்தரு நாட்டு நடப்பு தெரியாதவாறு இருப்பீங்கன்னு நினைக்கும்போது சிரிக்கத்தான் தோணுது ......

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X