பாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல் | Dinamalar

பாலியல் பிஷப்புக்கு 3 நாள் போலீஸ் காவல்

Updated : செப் 23, 2018 | Added : செப் 22, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா, பலாத்கார பிஷப், மருத்துவமனை, நெஞ்சுவலி, கன்னியாஸ்திரி

கொச்சி : கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோ முல்லக்கல்லிடம் கடந்த 3 நாட்களாக குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட பிஷப் இன்று பாலாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து பிஷப்பை போலீசார் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டனர். இதற்கு கோர்ட் அனுமதி அளித்து, பிஷப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவையும் நிராகரித்து விட்டது.

நேற்று (செப்.,21) 3வது நாள் விசாரணைக்கு பிறகு பிஷப் முல்லக்கல் கைது செய்யப்பட்டார். அவரை எர்ணாகுளம் மாவட்டம் திரிப்புனிதுரா குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருந்து கோட்டையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பிஷப்பிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோட்டையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ்



அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிஷப்புக்கு ரத்தம் அழுத்தம் அதிகரித்து காணப்படுவதாகவும், லேசான நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறினர். மேலும் இசிஜி உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள் பிஷப்பிற்கு எடுக்கப்பட்டது. அவரது உடலில் பெரிய அளவில் பிரச்சனை ஏதுமில்லை.

சிகிச்சைக்கு பின்னர் பிஷப்பை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது பிஷப் பிரான்கோவிடம் கோர்ட் அனுமதியின்படி 3 நாள் விசாரணை நடத்தவுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-201821:03:23 IST Report Abuse
RamachandranKrishnamurthy இவருக்கு ரோம் காங்கிரஸ் வக்கீல் சிங்க்வீ ஆஜராகலயா?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-செப்-201819:14:10 IST Report Abuse
Kasimani Baskaran நெஞ்சு வலி வந்து 5 மருத்துவமனையில் லாலு போல படுத்துக்கொள்ள ஆசைதான்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
22-செப்-201816:50:39 IST Report Abuse
jagan இப்ப மட்டும் ஏன் இந்திய டிரஸ் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X