கோட்டையை பிடிக்க புதிய திட்டம்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!

கொங்கு மண்டலத்தை பலப்படுத்தி, கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில், ஸ்டாலின் இறங்குகிறார்.

கோட்டையை, பிடிக்க, புதிய, திட்டம்!


கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ளன.இந்த மண்டலத்தில், 57 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 53 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணிக்கு, நான்கு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.


இதேபோல, 2016 சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 45 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி, 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11ல்,
10 தொகுதிகளை, அ.தி.மு.க., அள்ளியது. கோவையில் உள்ள, 10 தொகுதிகளில்

ஒன்பதை கைப்பற்றியது. ஈரோட்டில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், இரண்டு சட்டசபை தேர்தல் களிலும், அ.தி.மு.க.,வே வெற்றி வாகை சூடியது.


ஆரம்ப காலங்களில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க., செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.
ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்தது. அந்த சரிவில் இருந்து, மீண்டு வர முடியாத நிலையில், தி.மு.க., உள்ளது.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் அதிக வெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டதால், ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலைக்கு, தி.மு.க., தள்ளப்பட்டது.


எனவே, கொங்கு மண்டலத்தில், கட்சியை பலப் படுத்தும் நடவடிக்கையை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துவங்கவுள்ளதாக, தகவல் வெளியாகி யுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப் படுவதாவது:கொங்கு மண்டலத்தில், நகர்ப்புற ஓட்டுகளை விட, கிராமப்புற ஓட்டுகளே அதிகம். எனவே, கிராமப்புற மக்களின் ஆதரவை பெறும் வகையில், ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். முதற்கட்டமாக, இம்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செல்ல முடிவு செய்துள்ளார்.


மக்களை சந்திக்கும் போது, அவர்களது பிரச்னைகளை அறிந்து, அதற்கேற்ப உதவிகள்

Advertisement

செய்யவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பெண்கள், இளைஞர்கள் ஓட்டுகளை குறி வைத்து, அவர் பயணம் செய்யவுள்ளார். திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கு முன் அல்லது பின், இந்த சுற்றுப்பயணம் அமையும். கொங்கு மண்டலத் தில் கால் பதிப்பதன் வாயிலாக, கோட்டையை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில், இந்த, 'ஆப்பரேஷனை' அவர் அரங்கேற்ற உள்ளார்.


அதே நேரத்தில், கொங்கு மண்டல உடன் பிறப்புகளிடையே, பெரிய அளவில் கோஷ்டி பூசல் காணப்படுகிறது. அதை களைவதற்கான முயற்சியிலும், ஸ்டாலின் ஈடுபட உள்ளார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படு கிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-செப்-201820:35:30 IST Report Abuse

Swaminathan Chandramouliஹிந்து விரோத போக்கினால் சுடாலின் வெற்றி பெறுவது கஷ்டம் தான் . ஏன் என்றால் இவருக்கு குருவாக கோழைமணி இருக்கிறார் . பார்ப்பனரை இழிவாக பேசி ,பேசியே காலத்தை கடத்துகிறார் இந்த ஓசி சாப்பாடு ஆசாமி . பெரியாரின் மூத்திரப்பையை சுமந்து கூடவே சென்றதால் திருச்சிராப்பள்ளி புத்தூரில் பெரியார் மாளிகையில் தவசு பிள்ளையாக வேலை செய்தார் . பெரியார் காலமானவுடன் அவரது மனைவி ( இரண்டாவது )மணியம்மையை ஏமாற்றி சொத்துகளை கைப்பற்றி சுக வாழ்வு வாழுகிறார் . தவசுப்பிள்ளை வேலைக்கு முன் பெரியார் மாளிகையின் கேட் காவலாளியாக இருந்த அனுபவமும் உண்டு

Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
24-செப்-201814:27:01 IST Report Abuse

Nisha Rathiஎங்கள் தலைவர் வை.கோ இருக்கும் வரை கவலை இல்லை சுடாலின்

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
23-செப்-201814:54:38 IST Report Abuse

Baskarஓடுகிற ஆட்டையே பிடிக்க முடியாத உனக்கு கோட்டை ஒரு கேடா.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
23-செப்-201820:22:43 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஉங்களுக்கு ஆட்டையை போடுறவுங்க தான் வேண்டுமோ...?...

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X