மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்

Added : செப் 23, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மின்கட்டணம், ஜி.எஸ்.டி

சென்னை: மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட உள்ளதாக, சிலர் தவறான தகவலை பரப்பும் நிலையில், மின் வாரியமும், அதை தெளிவுபடுத்தாமல் இருப்பதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
புதிய மின் இணைப்பு வழங்கும் போது, பதிவு கட்டணம், மீட்டர் வாடகை உள்ளிட்ட, பல்வகை கட்டணத்தை, மின் வாரியம் வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருவதால், 18 சதவீதம் வரி விதிக்குமாறு, மின் வாரியத்தை, ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவுறுத்தியது. இதையடுத்து, வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு, பதிவு கட்டணமான, 50 ரூபாய்க்கு, 18 சதவீத, ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும்படி, பொறியாளர்களுக்கு, ஜூன் இறுதி முதல், மின் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில், மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பதாக, சிலர் தகவல் பரப்புவதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: புதிய மின் இணைப்பு வழங்கும் போது, ஒரே முறை வசூலிக்கும், பல்வகை கட்டணத்தில், பதிவு கட்டணம், மீட்டர் வாடகை கட்டணத்திற்கு மட்டும், 18 சதவீதம், ஜி.எஸ்.டி., வரி உண்டு. அதிலும், வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில், மீட்டர் வாடகை வராது. அது, தொழிற்சாலைகளுக்கு மட்டும் பொருந்தும். இரு மாதங்களுக்கு, ஒரு முறை வசூலிக்கப்படும், மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு, வரி கிடையாது. சிலர், இம்மாதம், 1ம் தேதி முதல், மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுவதாக, மக்களிடம் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக, ஊழியர்களும் சரியான பதில் தருவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, சில ஊழியர்கள், 'ரசீதில், வரி அச்சாகவில்லை' எனக்கூறி, நுகர்வோரிடம் கூடுதல் பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. அதனால், எதற்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது என்ற விபரத்தை, அனைத்து மின் கட்டண மையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களில், மின் வாரியம் விளம்பரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
23-செப்-201817:42:15 IST Report Abuse
J.Isaac அடுத்து கழிவறைக்கும் முடி வெட்டுவதற்கும் துணி துவைப்பதற்க்கும் GST போட்டாலும் அச்சிற்படுவதற்கில்லை .
Rate this:
Share this comment
Cancel
N.Murugan - Nagercoil,இந்தியா
23-செப்-201814:05:01 IST Report Abuse
N.Murugan இப்படி வரி விதித்து ஆட்சி புரிய மோடியோ ஜெட்லீயோ தேவை இல்லை. சாதாரண ஒரு மனிதன் போதும் அதி மேதாவி தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-செப்-201811:45:03 IST Report Abuse
Pugazh V எனது எல்லா அரசியல் விருப்பு வெறுப்பு களை ஒதுக்கி வைத்துவிட்டு எழுதுகிறேன் ::: மோடி மற்றும் பிற அமைச்சர்களே, தயவுசெய்து கூண்டோடு ராஜினாமா செய்து விட்டு அவரவர் வீடுகளுக்கு செல்லுங்கள். வேறு யார் வேண்டுமானாலும் ஆட்சியில் அமரட்டும். சர்வ நிச்சயமாக அவர்கள் இப்படி மக்களை வாட்டி வதைக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X