நடிகர் கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்றம்

Updated : செப் 24, 2018 | Added : செப் 23, 2018 | கருத்துகள் (179)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : தமிழக முதல்வரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் நடிகர் கருணாசை இன்று (23 ம் தேதி) காலையில் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாசை வரும் அக்.5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசுகையில்; முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுகிறார். இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்தேன் என கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்ற சவாலும் விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, கலவரத்தை தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, சாலிகிராமம் வீட்டில் இருந்த கருணாசை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர்.



சட்டப்படி சந்திப்னே் : கருணாஸ்


முன்னதாக அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் வேனில் ஏற்றும் முன்பு நிருபர்களிடம் பேசிய கருணாஸ் :
என்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி பெற்றார்களா என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் சிறை செல்லவே பிறந்தவர்கள். சீவலப்பேரி பாண்டி வழி வந்தவர்கள். பேச்சுரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
தொடர்ந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புழல் சிறையில் கருணாஸ் அடைக்கப்பட்டார். சில மணி நேரத்திற்கு பிறகு அவரை வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-செப்-201803:57:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தினகரன் கட்சி சார்பில் அடுத்த தேர்தலில் கருணாஸ் எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற, அதிமுக இப்பவே அச்சாரம் கொடுத்து வைக்கிறது. பிரச்சாரத்துக்கு இது போதும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
27-செப்-201808:36:38 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> காவல்துறையில் லஞ்சம் தலைவிரிச்சாடுதே எங்கே சொல்லி அலறுவது நேர்மையான காவல்துறை ஆட்கள் எவ்ளோபெருங்க தெருவாங்க ???????????லஞ்சம் இல்லாத இடமே இல்லீங்க தமிழ்நாட்டுலே காமராசர்க்காலத்துலேயே சில லாஞ்சாதிபதிகள் உண்டு என்று கேள்விபட்டுருக்கோம் இப்போதெல்லாம் நேர்மையா வரும் சம்பளம் போதும் இரு இருக்குராங்க சிலர் என்பதும் உண்மை , அவா மட்டுந்தான் தைரியமா செயல்பாடுறாங்க என்பதும் உண்மை . என் கணாவரும் அரசூலே மத்திலே வேலை செய்தவர் தான் இறுதிவரை அரசு வீட்டுலே தான் இருந்தோம்ம் ஓய்வுக்கு பிறகு சென்னைலே இருந்தோம் எவ்ளோகஷ்டம் பட்டு அண்ணா நகரிலே பிளாட் வாங்கிட்டு குடிநீருக்கு அவ்ளோகஷ்டம் பட்டோம் சென்னையே வேண்டாம் என்று வீடடையும் வித்துட்டு போயிட்டோம் இப்போதும் பென்சன் தான் வாழ்க்கைஓடுது
Rate this:
Share this comment
Cancel
1947 - Part 2 - Chennai,இந்தியா
26-செப்-201802:41:00 IST Report Abuse
1947 - Part 2 தலித்தை கொன்ற 'ராக்கெட் ராஜாவை' கைது செய்து என்கெளண்டேர் பண்ண துப்பு இல்ல.. ஹை கோர்ட்டை அவமதித்து பேசிய ராஜாவை கைது செய்ய துப்பு இல்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X