திட்டவட்டம்! 'ரபேல்' விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது Dinamalar
பதிவு செய்த நாள் :
திட்டவட்டம்!
'ரபேல்' ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது
ஹாலண்டே முரண்பட்டு பேசுவதாக பாய்ச்சல்

புதுடில்லி : ''ரபேல் போர் விமானங்களை வாங்க, டசால்ட் நிறுவன பங்குதாரராக, ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில், இந்தியாவுக்கு தொடர்பில்லை. இந்த விஷயத்தில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே முரண்பட்டு பேசுகிறார். எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 திட்டவட்டம்!,ரபேல், விமான ஒப்பந்தம்,ரத்து,செய்ய முடியாது


இந்திய விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங் களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார்.

ரபேல் போர் விமானத்தை தயாரித்து வழங்கும், பிரான்சின், 'டசால்ட்' நிறுவனத்துடன், அனில் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் டிபென்ஸ்' நிறுவனம், விமான தயாரிப்பில் பங்குதாரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதன்படி, ரபேல் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பது மற்றும் விமானத்தை பழுது பார்ப்பது போன்ற பணிகளை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்பதாக, தகவல் வெளியானது.

மத்திய அரசு நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடெட்'டை ஒதுக்கி, ரிலையன்ஸ் டிபென்சுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுஉள்ளதால், ஊழல் நடந்துஉள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் செய்தி நிறுவனத்துக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹாலண்டே, சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: டசால்ட் நிறுவனத்தின் பங்கு நிறுவனமாக, இந்திய அரசின் நிர்ப்பந்தத்தால், ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. வேறு நிறுவனத்தை தேர்வு செய்ய, பிரான்ஸ் அரசுக்கு வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனால், மத்திய அரசுக்கு எதிராக, ராகுல் மீண்டும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். 'இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்., வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தனியார், 'டிவி'க்கு, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி அளித்த பேட்டி:கடந்த, ஆக., 30ல், காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'ரபேல் விவகாரம் தொடர்பாக, பிரான்சில் குண்டுகள் வெடிக்கப்போகின்றன' என, கூறியிருந்தார். அதுபற்றி, ராகுலுக்கு முன்பே எப்படி தெரியும் என்பது புதிராக உள்ளது.பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவுக்கும், ராகுலின் பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரிகிறது.

Advertisement

இதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்றாலும், மனதில் சந்தேகம் எழுகிறது. தன் கருத்து தொடர் பாக, ஹாலண்டே முரண்பட்டு பேசி வருகிறார். ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் ராணுவ தேவைகளுக்காக இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்கள், இந்தியாவை நிச்சயம் வந்தடையும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் பரிந்துரைப் படி, டசால்ட் நிறுவன பங்குதாரராக, ரிலையன்ஸ் டிபென்ஸ் சேர்க்கப்பட்டதாக, ஹாலண்டே கூறியிருந்தார். மற்றொரு சமயம், 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, அரசு பின்கள வேலை செய்ததா எனத் தெரியவில்லை. ரிலையன்ஸ் டிபென்சை பங்கு தாரராக சேர்க்கும் முடிவை, டசால்ட் நிறுவனம் எடுத்திருக்கலாம்' என, ஹாலண்டே கூறுகிறார்.

இவ்வாறு முரண்பட்ட கருத்துகளை அவர் கூறி வருகிறார். உண்மைக்கு இரு வேறு முகங்கள் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, 'முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் சர்ச்சைக் குரிய பேச்சால், இந்தியாவுடனான உறவு பாதிக்கப் படும்' என, பிரான்ஸ் அரசு கவலை தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-செப்-201800:20:18 IST Report Abuse

Mani . V"நாங்கள் ஏற்கனவே வாங்க வேண்டியதை வாங்கி விட்டதால், 'ரபேல்' ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் நாங்கள் பங்கு பிரித்துக் கொண்டதை திரும்ப ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும்".

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-செப்-201819:31:33 IST Report Abuse

Pugazh Vதப்பா சொல்றீங்க நாராயணன் முத்து & கண்மணி :: பக்கோடா வை மறக்கலாமா? பஜ்ஜி சாப்பிட்டால், உடனே ரெய்டு தான். ஜாக்கிரதை.

Rate this:
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
24-செப்-201821:32:30 IST Report Abuse

கண்மணி கன்னியாகுமரிஎழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்......

Rate this:
Sandru - Chennai,இந்தியா
24-செப்-201818:43:19 IST Report Abuse

Sandruவேலிக்கு ஓணான் சாட்சி. ஜெட்லீ திறமைக்கு சுப்ரமணிய சாமியே சாட்சி. சிறிதும் திறமை இல்லாத, நாட்டின் பொருளாதார வீழ்ச்சி பற்றி அறிக்கை விடாத இவர், பாதுகாப்பு துறை ஊழலுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார். கூலிக்கு மாரடிக்கிறாரா.

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X