அதிரடி: அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்காதீங்க Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு நிலங்கள், ஆக்கிரமித்தவர், பட்டா,சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 'அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது. அரசு நிலங்களை கபளீகரம் செய்தவர்கள் மீது கருணை காட்டாமல் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களை சரி பார்க்காமல் முறைகேடாக பட்டா வழங்கிய 'லஞ்ச' அதிகாரிகளை 'உள்ளே' தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா இலுப்பனத்தம் கிராமத்தில் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி லட்சுமணன் என்பவர் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை கோவை மாவட்ட வருவாய் அதிகாரி நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமணன் மனு தாக்கல் செய்தார்.லட்சுமணன் சார்பில் வழக்கறிஞர் கந்தன் துரைசாமி ''பரம்பரை சொத்தான இந்த நிலத்துக்கு,1931ல் பட்டா புத்தகம் வழங்கப்பட்டது. மனுதாரரின் தந்தை பெயரில் அசல் பட்டா உள்ளது. அதனால் மனுதாரரின் பங்குக்கு உரிய நிலத்துக்கு பட்டா பெற உரிமை உள்ளது,'' என்றார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ரகு ''மனுதாரர் கோரும் நிலம், புறம்போக்கு நிலம்; அதற்கு

பட்டா வழங்க முடியாது,'' என்றார்.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க முடியாது. வருவாய் ஆவணங்களில் உள்ள நில வகைப்பாடு விபரங்களை, அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும். ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், அதை வருவாய் ஆவணங் களுடன் சரி பார்க்க வேண்டும்.
தவறாக பட்டா வழங்கப்பட்டிருந்தால், வருவாய் ஆவண குறிப்புகளுக்கு முரணாக பட்டா வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது வருவாய் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து பட்டா வழங்க வேண்டும்.மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வருவாய் ஆவணங்களை சரிபார்க்காமல் வழக்கம் போல் பட்டா

வழங்கப்படுவது தெரிகிறது. நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்து வருவதால், அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள் உள்ள நிலங்களை பராமரிப்பதில் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசு நிலங்களையும் நீர் நிலைகளையும் ஆக்கிரமிக்கும் மனப்போக்கு உள்ளது. இத்தகைய ஆக்கிரமிப்புகளை அனுமதித்தால், பொது மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்வது ஒரு பெரிய குற்றம். ஆக்கிரமிப்புகளை அனுமதித்தால் மக்களின் நலன் முடங்கி விடும்.பொது மக்களின் நலன் கருதி அரசு நிலங்கள், நீர் நிலைகள், சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டும். அரசு நிலங்களை எல்லாம் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே பயன்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை சட்டத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி அகற்ற

வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, சட்டப்படி அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். மனுதாரர் கோருவது புறம்போக்கு நிலம் என அரசு தரப்பில் கூறுவதால், மாவட்ட நிர்வாகத்தில் உள்ள வருவாய் ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா நிலம் என தெரிய வந்தால், விண்ணப்பத்தை பரிசீலிக்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமைகளை நிலைநாட்ட சிவில் நீதிமன்றத்தையும் மனுதாரர் நாடலாம்.கோவை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு கூட்டங்களை கலெக்டர் நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும், தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.அதிகாரிகள் கடமையாற்ற தவறினால்; மெத்தனம் காட்டினால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்கள், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கருணை காட்டக்கூடாது. அரசு நிலங்களை பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
25-செப்-201820:54:28 IST Report Abuse

southindianஏன் சார் லஞ்ச அதிகாரிகள் மட்டும் இளிச்சவாயர்களா லஞ்ச மந்திரிகளை பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை அவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் கணம் கோட்டார் அவர்களே

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
25-செப்-201818:54:36 IST Report Abuse

தமிழ் மைந்தன் ஐயா நீதிபதி அவர்களே திருப்பூர் மாவட்ட தலைமை நீதிமன்றமே குளத்துக்குள்ள தான் கட்டுமான பணியே நடக்குது 20 சதவீத பணிகளே முடிந்துள்ளது உங்க உத்தரவு இதுக்கு பொருந்துமா?

Rate this:
jagan - Chennai,இந்தியா
25-செப்-201818:23:46 IST Report Abuse

jaganஉள்ளே தள்ள கேஸ் போட்டா, போதிய ஆதாரம் இல்லை என விடுவிப்பதே இந்த நோய்கள் தான்

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X