கடும் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு : 73.77 ஆனது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடும் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு : 73.77 ஆனது

Added : அக் 04, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, பங்குச்சந்தைகள், அன்னிய செலாவணி சந்தை, இந்திய பங்குச் சந்தைகள் சரிவு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, 
Indian rupee value, crude oil prices, stock markets, foreign exchange market, Indian stock markets declined, Indian rupee depreciated,

மும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இறக்குமதியாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியோர் டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,4 காலை 9.15 மணி நிலவரம்) இந்திய ரூபாயின் மதிப்பு 44 காசுகள் சரிந்து 73.77 என்ற நிலையை எட்டி உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 73.34 ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் 527 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
05-அக்-201804:26:01 IST Report Abuse
Nagan Srinivasan இந்திய ரூபாயின் மதிப்பு 100 என்ற நிலையை இன்னமும் ஒருவருடத்தில் எட்டி விடும் நீங்கள் இந்தியா ரூபாயை அமெரிக்கா டாலருக்கு மாற்றி வங்கியில் ஒருவருடம் வைத்தால்? நல்ல லாபம்தான்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-அக்-201802:49:07 IST Report Abuse
Mani . V இந்த ஆண்டுக்குள் சரிவு 100 க்கு வந்து விடும். அதையும் சாதனை என்று சொம்புகள் புலம்பித் திரியும். இதை இமாலய சாதனை என்று கூறி வரும் தேர்தலில், நம் ஜி மழை, மழையாய் கண்ணீர் சிந்தி ஓட்டு கேட்பார். அவரின் அழுகை நடிப்பை உண்மை என்று இந்திய மக்களும் நம்புவர்.
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
05-அக்-201801:40:53 IST Report Abuse
Rahim Gani பெட்ரோல் விலை கதிகலங்க வைக்கிறது ,டீசல் வலை பயமுறுத்துகிறது,கியாஸ் விலை கழுத்தை நெரிக்கிறது.....இதெல்லாம் இப்பொ யாரோ சொன்னது இல்ல, எங்க அக்கா தமிழிசை முந்தைய ஆட்சியின் போது சொன்னது ,யக்கோவ் நீங்க எங்க இருக்கிங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X