அரசுக்கு எதிராக சூழ்ச்சி; தினகரன் சதி அம்பலம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசுக்கு,எதிராக,சூழ்ச்சி,தினகரன்,சதி,அம்பலம்

பழனி - பன்னீருக்கு எதிராக சூழ்ச்சி செய்து, ஆட்சியை கவிழ்க்க, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலாவின் உறவினர் தினகரன், சதி செய்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''தினகரனின் சதியை முறியடிப்போம்,'' என, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சூளுரைத்துள்ளார்.

அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம்கட்டப்பட்ட பின், ஆட்சியை கவிழ்க்க, தினகரன், பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார்; எம்.எல்.ஏ.,க்களை, தன் பக்கம் இழுக்க முயற்சித்தார். அமைச்சர் பதவியை விரும்பிய சிலர் மட்டும், அவர் பக்கம் சென்றனர். அவர்களை பயன்படுத்தி, ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார். அந்த, எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, தோல்வியில் முடிந்தது.

அதன்பின், பல வழிகளில் முயற்சித்தும், ஆட்சியை கவிழ்க்க முடியாததால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே, பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சியை மேற்கொண்டு உள்ளார். இதன் காரணமாக, அணிகள் இணைவதற்கு முன், பன்னீர்செல்வத்துடன் நடந்த சந்திப்பை, தற்போது வெளியிட்டுஉள்ளார்.

இதை அறிந்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், 'அவரது சதி முயற்சி எடுபடாது. அவரது சூழ்ச்சியை முறியடிப்போம்' என, சூளுரைத்துள்ளனர். தினகரன் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதற்காக, நேற்று மாலை, சென்னையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: தினகரன், மிகப்பெரிய குழப்ப நிலையில் இருப்பதால், என் மீது தொடர்ந்து, சேற்றை வாரி வீசுகிறார். கட்சியும், ஆட்சியும், அந்த

குடும்பத்தின் பிடியில் சென்று விடக் கூடாது என்பதற்காக, தர்மயுத்தம் நடத்தினேன். அப்போது, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்று, ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

முதல்வரும், அமைச்சர்களும், தினகரனை ஒதுக்கினர். அப்போது, என்னை சந்தித்து, மனம் விட்டு பேச வேண்டும் என, தினகரன் கூறியதால், அவரை சந்தித்தேன். அவர், மனம் திருந்தி, மனம் விட்டு பேச வருகிறார் என, நினைத்தபோது, முதல்வர் பழனிசாமியை இறக்கிவிட்டு, தான் முதல்வராக வர வேண்டும் என்ற, நோக்கத்தில் பேசினார். எனக்கு துாக்கி வாரி போட்டது. அதில், 'எனக்கு உடன்பாடு இல்லை' என கூறி, வந்து விட்டேன்.

நுாறு முறையாவது, என்னை சந்திக்க வேண்டும் என, தினகரன், பல்வேறு நபர்கள் வழியாக வற்புறுத்தினார். 'தர்மயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது' எனக் கூறி, வர மறுத்தேன். 'தினகரன், அரசியலை விட்டு ஒதுங்கப் போகிறார். அவர் கூறுவதை கேளுங்கள்' என, கூறியதால் சந்தித்தேன். அரசியல் நாகரிகம் கருதி, என்னுடன் இருந்தவர்களிடம் கூட, அந்த சந்திப்பை கூறவில்லை.

இப்போது, அந்த சந்திப்பை கூறி, முதல்வருக்கும், எனக்கும் இடையே

குழப்பத்தை ஏற்படுத்தலாம் என, நினைக்கிறார். எனக்கு, எந்த காலத்திலும், பதவி ஆசை கிடையாது. அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த நண்பர், என் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டார்.

சத்தியமாக, நான் பொய்யான, எந்த வார்த்தையையும், மக்களிடம் கூறியதில்லை. அணிகள் இணைந்ததற்கு பின்னால், அவருடன் எந்தவித ஒட்டும், உறவும் இல்லை. ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவும், எனக்குள்ள நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், தினகரன், பொய் கூறி உள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டுகளை, மக்கள் நம்பவில்லை. அவர் பொய் கூறுவது, கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியும்.

மூன்று முறை முதல்வராக இருந்த திருப்தி, எனக்கு போதும். அரசை கவிழ்த்து, முதல்வராகும் ஈனத்தனமான எண்ணம், எனக்கு கிடையாது. அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி, கட்சியை பிளவுபடுத்தி, ஆட்சியை கவிழ்க்க, இப்பிரச்னையை எழுப்பி உள்ளார். குறுக்கு வழியில், முதல்வராக வேண்டும் என்று, என்றைக்கும், எனக்கு ஆசை வராது.

கடந்த, 2014ல், கட்சியிலிருந்து அவரை, ஜெ., நீக்கினார்.

அதன்பின், சேர்க்கவில்லை. அவர் செய்த துரோகம், எனக்கும் தெரியும். அரசியல் நாகரிகம் தெரியாதவர், தினகரன் என்பது, தற்போது நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

உற்சாகம் தரும் சந்திப்பு :

ஆட்சி, கட்சி மற்றும் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து கோவை மாவட்டம் சூலுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ் பரபரப்பான கருத்துக்களை கூறும் வழக்கம் உடையவர். நேற்று சூலுாரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''துணை முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க., தலைவர் தினகரன் சந்திப்பு எங்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் உற்சாகம் அளிக்கிறது. இருவரும் இணைப்பு குறித்து பேசியிருக்கலாம். அனைவரும் இணைந்தால் தான் ஆட்சியை காப்பாற்ற முடியும்,'' என்றார்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம், தினகரனை சந்தித்தது குறித்து, எங்களுக்கு எதுவும் தெரியாது.

தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகர்


அணிகள் இணைந்த பின், பன்னீர்செல்வம், தினகரனை சந்திக்கவில்லை. தினகரன், கட்சியில் இருக்கக் கூடாது என்பதில், பன்னீர்செல்வம் தெளிவாக உள்ளார். முதல்வரும் உறுதியாக உள்ளார். இருவரும், கட்சியை சிறப்பாக வழி நடத்துகின்றனர். திருப்பரங்குன்றத்தில், கட்சியினர் திரண்டு வந்திருந்தனர். இதை தாங்கிக் கொள்ள முடியாமல், அவர்களை பிரிக்க, தினகரன் ஏதேதோ பேசுகிறார்.

-வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சர்


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-அக்-201812:50:38 IST Report Abuse

balஇந்த ஆளையும் அம்மாவுடன் பெங்களூர் சிறையில் ஏன் அனுப்ப வில்லை.. சிடிஸின் படம் தீர்ப்பு மாதிரி ஒரு சட்டம் வரவேண்டும்...எவனொருவன் கொள்ளை அடிக்கிறானோ அவன் சொத்தை அனுபவிக்கும் எவரும் தண்டனை அனுபவிக்கவேண்டும்...இந்த தினகரன் பிறந்தப்போ பணக்காரனா இருந்தாரா.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-அக்-201800:31:43 IST Report Abuse

Mani . Vஇதை ஏன் வேறு கோணத்தில் யோசிக்க பலரும் மறந்து விடுகிறார்கள். அந்த "வேறு கோணம்" இதுதான். தர்மயுத்தர் பன்னீர் செல்வம், பழனிசாமி அணியுடன் இணையும் பொழுது ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் தனது அணியை இணைத்தார் (தனக்கு முக்கிய பதவி, தனக்கு வேண்டியவர்களுக்கு வருமானம் உள்ள பதவிகள்). ஆனால் காரியம் (இணைப்பு) முடிந்தவுடன் பழனிசாமி மிகவும் ஸ்ட்ராங்காக முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டதும், தர்மயுத்தர் பன்னீர் செல்வத்தையும், அவரின் அணி உறுப்பினர்களையும் கண்டே கொள்ளாமல் அவர்களை சற்று ஒதுக்கி வைத்து டம்மியாக்கிக் கொண்டு இருக்கிறார். இது தர்மயுத்தர் பன்னீர் செல்வத்துக்கு மிகுந்த வேதனையாய் இருந்தாலும், தான் ஒரு "தர்மயுத்தர்" என்பதால் ஆட்சியை கவிழ்த்தால் தன் மீது கெட்ட பெயர் ஏற்பட்டு "தர்மயுத்தர்" என்ற இமேசுக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ? என்று யோசித்து, தர்மயுத்தர் பன்னீர் செல்வம், தினகரனுடன் மறைமுக கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு பழனிசாமி அணியை கவிழ்க்கும் முயற்சியாக இதை ஏன் செய்திருக்க மாட்டார்? இதுதான் நடந்திருக்கும். இன்னும் சில வாரத்தில் தர்மயுத்தர் பன்னீர் செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் "முட்டிக்" கொண்டு ஆட்சி கவிழும் பொழுது தெரிந்து விடும் உண்மை விடயம். (அதனால்தான் தற்சமயம் தமிழகத்துக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை).

Rate this:
skv - Bangalore,இந்தியா
07-அக்-201812:20:43 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>வருமானம் உள்ள பதவிகளே தான் என்றால் இவர்களுக்கெல்லாம் என்னாத்துக்கு மாஸம் லக்ஷமலே சம்பளம் ?????????????????...

Rate this:
Sekar - Manama,பஹ்ரைன்
06-அக்-201820:24:11 IST Report Abuse

Sekarதினகரனை சந்தித்ததாக பன்னீர் ஒத்துக்கொண்டுள்ளார், இவர் ஏன் தினகரனை சந்திக்கவேண்டும் அவரே அழைத்தாலும் பன்னீர் செல்லலாமா?.

Rate this:
மேலும் 88 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X