தப்பு பண்ணிட்டேன்: சிறையில் அபிராமி கதறல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தப்பு பண்ணிட்டேன்: சிறையில் அபிராமி கதறல்

Updated : அக் 09, 2018 | Added : அக் 09, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Abirami, Puzhal Prison, Abirami suicide, அபிராமி, அபிராமி கள்ளக்காதல், புழல் சிறை, அபிராமி தற்கொலை, அபிராமி குழந்தைகள், அபிராமி கணவன் விஜய்,  அஜய், கார்னிகா, பிரியாணி கடை சுந்தரம், புழல் மத்திய சிறை, 
 Abirami children, Abhirami husband Vijay, Ajay, karnica, Biryani shop Sundaram,Puzhal,

சென்னை சென்னை,குன்றத்துார் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 30; தனியார் வங்கி ஊழியர்.அவரது மனைவி, அபிராமி, 25. அவர்களுக்கு, அஜய், 7,கார்னிகா, 4, எனஇரண்டு குழந்தைகள் இருந்தனர்.அபிராமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்திற்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது.இதற்கு இடையூறாக இருப்பதாக கருதி, கடந்த மாதம், 1ம் தேதி, பாலில் விஷம் கலந்து கொடுத்து, தன் இரண்டு குழந்தைகளையும், அபிராமி கொலை செய்தாள்.
போலீசார், அபிராமி மற்றும் சுந்தரத்தை, 5ம் தேதி, கைது செய்து, புழல் மத்திய சிறையில்அடைத்தனர்.இந்நிலையில் அபிராமி, நேற்று முன்தினம் இரவு, மின் இணைப்பில் கை வைத்து, தற்கொலைக்கு முயன்றதாக தகவல்பரவியது.ஆனால் அதை, சிறை அதிகாரிகள் உறுதியாக மறுத்தனர். புழல் போலீசிலும், சிறைத்துறை மூலம், புகார் ஏதும் செய்யப்படவில்லை.'சமூக வலைதளங்களில், தவறாக தகவல்கள் பரவி வருகின்றன' என, சிறைத்துறை அதிகாரிகளும், புழல் போலீசாரும் தெரிவித்தனர்.

தப்பு பண்ணிட்டேன்: அபிராமி கதறல்

சில தினங்களுக்கு முன் அபிராமியின் நெங்கிய உறவினர் மனு மூலம் அவரை சந்தித்திருக்கிறார். அப்போது அபிராமி என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் மன்னிக்க முடியாத தப்பு செய்து விட்டேன். என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி அழுதிருக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
15-அக்-201822:03:33 IST Report Abuse
சிற்பி ஆச யார விட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்று எல்லோரும் இருக்க வேண்டும். இன்று அழுது என்ன புண்ணியம். பொம்பள சிரிச்சா போச்சு. புகயல விரிஞ்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க. இப்போது கோர்ட்டு வேறு வந்து விட்டது உங்களை போன்றவர்களை காப்பாற்ற.
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
14-அக்-201811:29:11 IST Report Abuse
வந்தியதேவன் இந்தம்மாவை சொல்லி குற்றமில்லை.... சமூக கட்டமைப்பு சரியில்லை.... ஒரே ஒரு எடுத்துக்காட்டு... 1975களில் வீட்டுக்கு தெரியாமல் சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றாலே.... நான் அறியாதவர்... என் தந்தைக்கு தெரிந்தவர்.. “உங்க புள்ளை ஆத்துல குளிக்கிறத பார்த்தேனே... அதுவும் சுழல் உள்ள இடத்திலே பசங்களோட சேர்ந்து கும்மி அடிச்சானே” என்று சொல்ல... அன்னைக்கு பெல்டாலேயே எனக்கு விழும் பூஜைய இன்னைக்கு நினைச்சாலும் குலையே நடுங்கும்... அதுவும் செகப்பான என் உடம்பில்... சிகப்பு கலரில் பெல்ட்டின் வரிகள் பதிந்திருக்கும்... அத்தோடு... என்னுடன் வந்த பால்ய நண்பர்களின் தந்தையிடம் என் தந்தை சொல்லி... அவர்களுக்கும் அன்னைக்கு முழுவதும் பூஜைதான்...இது சின்ன பசங்க கெடக்கூடாது...ங்கற “சமூக அக்கறை” நிறைந்த அந்த காலம்... இப்ப.... பக்கத்து வீட்டுப் பையன்... அடுத்த தெருவுல பொண்ணோட கடலை போட்டுகிட்டிருந்தாலும்... நானோ.. அந்த பையனின் தந்தைக்கு தெரிந்தவர்களோ... அந்த பையனைப் பற்றி அவனது தந்தையிடம் சொல்லுவதில்லை... காரணம்... எது எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன...ங்ற சமூக அக்கறை இல்லாததுதான்... அதுபோலவே... இந்த காலத்துல... தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து.... உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களும் கையடக்க மொபைலில் தெரிவதால்... மனிதனின் இயல்பான குணமான கெட்டுப் போகக்கூடிய நிகழ்வுகளையே அதிகம் விரும்பும் நிகழ்வுகளை மொபைலில் பார்த்து... பார்த்து... பார்த்து... அது ஆழ்மனதில் பதிந்து... நல்லதையே மறந்து... தீமைகளையே “நன்மை”யாய் வரித்து... அது செயல்பாட்டுக் கொண்டு வருவதால் வந்த வினைதான்... எடுத்துக்காட்டாய்... ஒருநாள் விடியற்காலை ஐந்து மணிக்கு... டீ கடைக்கு செல்கிறேன்... விடிந்தும் விடியாத அந்த பாதி இருட்டில்... ஒரு நைட்ஷிப்ட் டிரைவர் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.. எதேச்சையாக ஒருநிமிட நேரம் என் பார்வை திரும்பியது... அந்த ஓட்டுநர் பார்த்துக் கொண்டிருப்பது பலான படம்... விடியற்காலையிலேயே பலான படத்தை பார்த்த அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்... இதுவே இப்படியென்றால்... எளிதாக மொபைலில் கிடைக்கும் இதுபோன்ற படங்களை இளம்பெண்கள் பார்த்தால்... அதன் விளைவுதான்... தான் தவமாய் தவமிருந்து பெற்ற இரண்டு பிஞ்சுகளை.... தன் கையாலே கொன்றது.... இதற்குக் காரணியே சமூக கட்டமைப்பும் சரியில்லை என்பதோடு... மொபைல் எனும் ராட்சஷன் எல்லார் கையிலும் இருப்பதால் உருவான கொடிய நிகழ்வுதான்... இதுபோன்று நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கிறது... வெளியே வந்தது இதுபோன்ற சில நிகழ்வுகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது... இன்னும் இருட்டில் உள்ள மனிதர்களும், நிகழ்வுகளும் பலப்பல... இப்போதைய இளையதலைமுறையினருக்கு... “உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்” எனும் ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தேவைகளைவிட மிகமிக முக்கியமான அடிப்படை தேவையாக “மொபைல் போன்” ஆகியதே காரணம்... அதுவே... ஒரு மனிதனை... அவனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் “மிருக குணத்தை” தட்டி எட்டி எழுப்பி வெளியே ஊர் சுற்ற வைப்பதன் விளைவுதான்... இதுபோன்ற மிருகத்தமான நிகழ்வுகள்....
Rate this:
Share this comment
Sankar Venugopal - Singapore,சிங்கப்பூர்
15-அக்-201814:51:20 IST Report Abuse
Sankar Venugopalமனித இனம் சீர்கெட மொபைல் போன் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
12-அக்-201810:18:46 IST Report Abuse
siriyaar Konjanal poruthirukalamillaiya ippa parunga unga matter legal ayiduchu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X