எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு விருது

Added : அக் 09, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தாளர்,  கலாப்ரியா, விருது

திருநெல்வேலி: எழுத்தாளர் கலாப்ரியாவிற்கு நெல்லை பல்கலையின் மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழில் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் விருது வழங்கப்படுகிறது.

2014ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த விருது முதன்முதலாக பேராசிரியர் இளையபெருமாள், பாரதி ஆய்வாளர் சீனிவிஸ்வநாதன் ஆகியோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. 2015ல் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனுக்கும், 2016ல் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் கலாப்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது இயற்பெயர் சோமசுந்தரம். 1950ல் பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைகாலில் வசிக்கிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1970களில் இருந்து எழுதிவருகிறார். கவிதைக்காக கலாப்ரியா என்னும் புனைப்பெயரில் எழுத துவங்கி அதுவே அவரது இலக்கிய அடையாளமாக மாறிவிட்டது.


பரிசு தொகை 1 லட்சம் ரூபாய்


தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, சென்னை புத்தக கண்காட்சி அமைப்பாளர்களின் கருணாநிதி பொற்கிழி விருது ஆகியன குறிப்பிடத்தகுந்தவை. வேனல் இவர் அண்மையில் எழுதிய நாவல் ஆகும். சுந்தரனார் விருது வரும் 12ம் தேதி நெல்லை பல்கலை வளாகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது. தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் வழங்குகிறார். துணைவேந்தர் பாஸ்கர் பாராட்டுகிறார். ஒரு லட்சம் ரூபாய் பரிசும், விருதும் பட்டயச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-அக்-201808:00:34 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்னும் வளரட்டும்
Rate this:
Share this comment
Muruga Vel - Chennai,இந்தியா
10-அக்-201809:47:35 IST Report Abuse
 Muruga Velஎது ....தாடியும் மீசையும் தான் வளரும் ...நீங்க என்னத்த சொல்ல வரீங்க .......
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
10-அக்-201805:53:03 IST Report Abuse
 Muruga Vel இவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் ..பெயர் மட்டும் சமஸ்கிருதம் .... கலைஞர் உட்பட ...
Rate this:
Share this comment
Cancel
sivan - Palani,இந்தியா
10-அக்-201802:05:52 IST Report Abuse
sivan அடுத்த வருடம் மோடி மறுபடியும் ஜெயித்து பதவிக்கு வந்தவுடன்.. சீசன் மறுபடியும் ஆரம்பிக்கும்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
10-அக்-201809:33:40 IST Report Abuse
சுந்தரம் ஓர் எழுத்தாளருக்கு விருது கொடுப்பதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? பக்தர்களுக்கு எப்போதும் ஆண்டவன் நினைப்புதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X