'வீடியோ' வெளியிட்ட டிரைவர், 'சஸ்பெண்ட்': ஒரே நாளில் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வீடியோ' வெளியிட்ட டிரைவர், 'சஸ்பெண்ட்': ஒரே நாளில் ரத்து

Updated : அக் 10, 2018 | Added : அக் 09, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'வீடியோ' வெளியிட்ட டிரைவர், 'சஸ்பெண்ட்': ஒரே நாளில் ரத்து

பழநி: அரசு பஸ்சின் அவலநிலை குறித்து, 'வீடியோ' வெளியிட்ட டிரைவர் விஜயகுமாரின், 'சஸ்பெண்ட்' உத்தரவு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அரசு போக்குவரத்து கிளையைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார். சில நாட்களுக்கு முன், பஸ்சில் பணிபுரியும்போது, பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும், ஷட்டர், பிரேக் சரிவர செயல்படவில்லை, அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், விஜயகுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து, திண்டுக்கல் பொதுமேலாளர் ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் விஜயகுமார், 'பஸ் இயக்கும்போது, ஏற்படும் சிக்கல்களை கூறினேன். அதை ஒருவர் வீடியோ எடுத்து பரப்பியுள்ளார்.'பஸ்சை இயக்கும்போது அலைபேசியில் பேசினால் தான் தவறு. அவ்வாறு நான் பேசவில்லை. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இது குறித்தும் ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டிரைவரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜயகுமார் கூறுகையில், ''சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து, நேற்று முதல் வழக்கம்போல பணிக்கு வர, கிளை மேலாளர் தெரிவித்துஉள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
16-அக்-201805:35:07 IST Report Abuse
 nicolethomson விஜயகுமார் செய்ததில் என்ன தவறு? பராமரிப்பு செய்வதில் உள்ள மெத்தனத்தை சுட்டிக்காட்டுவது தவறா ராஜேஸ்வரன்?
Rate this:
Share this comment
Cancel
paran - Mohanjodaro,இந்தியா
12-அக்-201808:02:00 IST Report Abuse
paran நிர்வாக சிக்கல்களை வெளியாரிடம் தெரிவிப்பது குற்றமல்லவா.
Rate this:
Share this comment
ramram - Pondicherry,பிரான்ஸ்
12-அக்-201811:49:20 IST Report Abuse
ramramஇது நிர்வாக சிக்கல் அல்ல நண்பரே. பயனாளிகளின் உயிர் சம்பந்தப்பட்டது....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-அக்-201809:29:05 IST Report Abuse
Srinivasan Kannaiya பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும், ஷட்டர், பிரேக் சரிவர செயல்படவில்லை, ...தமிழக போக்குவரத்து கழக பஸ்கள் எண்பது சதவிகிதம் அப்பிடித்தான் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X