காவிரி, நொய்யல் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க விவசாயிகள் வேண்டுகோள்| Dinamalar

தமிழ்நாடு

காவிரி, நொய்யல் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க விவசாயிகள் வேண்டுகோள்

Added : அக் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: கரூர் பகுதியில், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மழை பெய்து வரும் நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, ஆற்றில் கலந்துவிடப்படும் சாயக்கழிவை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நொய்யல் ஆறு உருவாகி, திருப்பூர் மாவட்டம் வழியாக பாய்ந்து, கரூர் மாவட்டம் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 75 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருகிய சாயப்பட்டரைகளால், நொய்யல் ஆறு பாதிக்கப்பட்டது. ஆற்றில் சாயக்கழிவு கலந்து விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், நொய்யல், அஞ்சூர், துக்காச்சி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சாயக்கழிவை கட்டுப்படுத்தக் கோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும், ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை, பல சாயப்பட்டறைகள் பின் பற்றாத காரணத்தால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு தொடர்ந்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் கூறுகையில், ' கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரும் சாயக்கழிவு, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்ல, வீராணம் ஏரி மூலம், காவிரி தண்ணீரை பயன்படுத்தும், சென்னை நகர மக்களுக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்படும். எனவே, சாயக்கழிவு விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சாயக்கழிவு பாதிப்பில் இருந்து நொய்யல், காவிரியாற்றை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், கரூர் மாவட்டத்தில், விவசாயம் பொய்த்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X