இதே நாளில் அன்று ஓ... அப்படீங்களா!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று ஓ... அப்படீங்களா!

Added : அக் 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று ஓ... அப்படீங்களா!


அக்டோபர் 11, 1942

அமிதாப் பச்சன்: உத்தர பிரதேசம், அலகாபாதில், 1942 அக்., 11ல் பிறந்தார். டில்லி பல்கலை சார்ந்த, கிரோரிமால் கல்லுாரியில், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தன், 20வது வயதில், கப்பல் கம்பெனியில் சரக்கு தரகராக வேலை பார்த்தார்.

சினிமா மீது ஆர்வம் கொண்ட அவர், 1969ல் வெளிவந்த, சாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். சிறந்த புதுமுக நடிகர் என்ற தேசிய திரைப்பட விருது கிடைத்தது. 1971ல் வெளிவந்த, ஆனந்த் படம் வெற்றி பெற்றது. பின், முதன்மையான வேடங்களில் நடித்த இவர், ஷோலே என்ற படத்தில் முன்னணி நடிகரான, தர்மேந்திராவுடன், கதாநாயகன் அந்தஸ்தில் நடித்தார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவின் நண்பரான இவர், 1984ல் காங்கிரசில் சேர்ந்தார். உ.பி., மாநிலம், அலகாபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்று முறை தேசிய திரைப்பட விருதுகள், 12 பிலிம் பேர் விருதுகள் பெற்றவர். இவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-அக்-201809:09:39 IST Report Abuse
Srinivasan Kannaiya வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X