பழனிசாமி உறுப்பினரே அல்ல: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., தகவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமி உறுப்பினரே அல்ல
தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., தகவல்

'ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்த, கே.சி.பழனிசாமி, கட்சியின் உறுப்பினரே அல்ல' என, தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க., தெரிவித்து உள்ளது.

பழனிசாமி,உறுப்பினர்,அல்ல,தேர்தல் கமிஷன்,அ.தி.மு.க.,அமைச்சர்,புது மனு



அ.தி.மு.க.,வில், அணிகள் இணைப்புக்கு பின், பொதுச்செயலர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக, துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக, முதல்வர் பழனிசாமியும் பதவி வகிக்கின்றனர்;

ஆனால், இந்த மாற்றத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாக, இப்பதவிகள் உருவாக்கப்பட்டதாக புகார் எழுந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.


அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி, இதுகுறித்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'விதிமுறைகளுக்கு முரணாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டும்' என, அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவுபிறப்பித்தது.


இதன்படி, நான்கு வாரங்களில், இந்த ஒட்டு மொத்த விவகாரத்தில், உரிய முறையில் விசாரித்து முடிவெடுத்து அறிவிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இரு தரப்புக்கும் விளக்கம்கேட்டு, தேர்தல்ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி யிருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் விளக்கம் அளிக்க, தமிழக சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம், நேற்று

Advertisement

டில்லி வந்து, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை அளித்தார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள, கே.சி.பழனிச்சாமி, தற்போது கட்சியிலேயே இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட அவர் நீடிக்கவில்லை. கட்சிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவர் கூறும் புகாரை, ஏற்ககூடாது. அம்மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - chennai,இந்தியா
11-அக்-201812:42:05 IST Report Abuse

sureshகாலம் மாறும் admk valuperum

Rate this:
skv - Bangalore,இந்தியா
19-அக்-201805:47:49 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நெஸ்ட் அஞ்சி வருசம் பூரண ஓய்வுக்கு தயார் எல்லா திமுக அண்ட் அதிமுக ஆட்களும் இதுகள் செய்த உருப்படியான வேலை 80%தமிழனை குடிகாரனாகி பல குடும்பத்தை அழிச்சதுதான் முக கொண்டாந்தாக ஜெயா நாமகரணம் டாஸ்மாக் என்று சூட்டினாக விதவைகள் எண்னிக்கை அதிகம் ஆச்சு குடிகாரகணவனுக்களை விட்டுட்டு வெளியேறிய பொண்ணுக எண்ணிக்கையும் அதிகம் ஆச்சுது ஆஹா எவ்ளோ பெரிய நல்லகாரியம் செய்துட்டுப்போயி சேந்தாக...

Rate this:
suresh - chennai,இந்தியா
11-அக்-201812:40:35 IST Report Abuse

sureshநிச்சயம் admk வலுப்பெறும் மீண்டும் வரும் ops eps ttv இணைவார்கள்

Rate this:
paran - Mohanjodaro,இந்தியா
11-அக்-201811:15:16 IST Report Abuse

paranகே.சி.பழனிசாமி என்பவர் அதிமுவிலிருந்து நீக்கப்பட்டவ்ர்.அவர் நீக்கப்படாமல் ஆட்சியிலோ கட்சியிலோ ஏதாவது உயர் பதவி கொடுத்திருந்தால் தான் வேளியேறிய கட்சியின் மீது இவ்வாறு புழுதி வாரி தூற்றியிருக்க மாட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் கட்சியின் ஏகோபித்த தலைவர்கள். அவர்களுக்குப் பின் அவர்கள் தலைமை ஏற்றிருந்த கட்சியை வழி நடத்துவது அவசியம். அதனால் தலைமைக்குரிய மரியாதையை காப்பாற்றி திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளாராக இருப்பதை சட்டத்தாலும் நிராகரிக்க முடியாது.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X