கிராமங்களை கண்காணிக்க காவலர்கள்.. நியமனம்! குற்ற சம்பவங்களை குறைக்க புதிய யுக்தி, ரகசிய தகவல் பெற புகார் பெட்டி அமைப்புதிருவள்ளூர், | Dinamalar

தமிழ்நாடு

கிராமங்களை கண்காணிக்க காவலர்கள்.. நியமனம்! குற்ற சம்பவங்களை குறைக்க புதிய யுக்தி, ரகசிய தகவல் பெற புகார் பெட்டி அமைப்புதிருவள்ளூர்,

Added : அக் 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கிராமங்களை கண்காணிக்க காவலர்கள்.. நியமனம்! குற்ற சம்பவங்களை குறைக்க புதிய யுக்தி, ரகசிய தகவல் பெற புகார் பெட்டி அமைப்புதிருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில், குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில், ஒவ்வொரு கிராமங்களிலும், காவல் அலுவலர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ரகசிய தகவல்களைப் பெற, கிராமம்தோறும் புகார் பெட்டி அமைக்கும் திட்டம், நேற்று துவக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய காவல் உட்கோட்டங்கள் உள்ளன.
இவற்றின் கீழ், சட்டம் - ஒழுங்கு, 29; அனைத்து மகளிர் ஐந்து; மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஐந்து, என, மொத்தம், 29 காவல் நிலையங்கள் உள்ளன.இந்த காவல் நிலையங்களில், ஆய்வாளர் முதல், காவலர் வரை, 900 பேர் பணிபுரிகின்றனர். இதைத் தவிர, மாவட்ட ஆயுதப்படையிலும், 250 காவலர்கள் பணிபுரிகின்றனர்.பற்றாக்குறைஇந்த நிலையில், மாவட்டம் முழுவதும், புதிது புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. நகர பகுதிகளில் இருந்து, பல கி.மீ., துாரம் தள்ளி, புதிய குடியிருப்பு பகுதிகள் அமைகின்றன.விரிவாகும் காவல் நிலைய எல்லைக்கு ஏற்ப, காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதன் காரணமாக, மக்கள் நடமாட்டம் இல்லாத, புதிய குடியிருப்பு பகுதிகளில், அடிக்கடி கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன.இதை தவிர்க்க, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம், புதிய அணுகுமுறையை, நேற்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.வாரம் தோறும் ஆய்வுமாவட்டத்தில் உள்ள, சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களை கண்காணிக்க, காவல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான துவக்க விழா, திருவள்ளூரில் நேற்று நடந்தது.மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன், திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், ஆர்.பொன்னி தலைமை வகித்து, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், தங்கள் பொறுப்பில் உள்ள கிராமங்களுக்கு சென்று, மக்களோடு மக்களாக பழகி, தினமும் தகவல்களை சேகரிப்பர்.இந்த விபரங்களை, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலாக அளிப்பர். அவற்றை பதிவேடாக பராமரித்து, வாரம்தோறும் ஆய்வு செய்வர்.ஒத்துழைப்புமணல் கடத்தல், கஞ்சா, மது விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களை பொதுமக்கள், கிராம பொறுப்பு காவலர்களிடம் தெரிவிக்கலாம்.காவல் நிலைய ஆய்வாளர், எஸ்.ஐ., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரது மொபைல் போன் எண்கள் உடைய, 'விசிட்டிங் கார்டு' கிராம மக்களுக்கு வினியோகிக்கப்படும்.
காவல் துறையின் இந்த முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அரசியல் கட்சி பிரமுகர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.புகார் பெட்டி மனு மீது உடனடி நடவடிக்கைதிருவள்ளூர் மாவட்டம் முழுவதும், நேற்று முதல் இத்திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரஹாசன், அங்குள்ள மகளிர் மேல்நிலை பள்ளியில், புகார் பெட்டியை துவக்கி வைத்து பேசியதாவது:ஒவ்வொரு கிராமத்திலும் புகார் பெட்டி வைக்கப்படும். அதில் கிடக்கும் மனுக்கள் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை, மாணவ - மாணவியர் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X