ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்

Added : அக் 10, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஊழல் பட்டியலை கவர்னரிடம் தர தயார் : ராமதாஸ்

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, 21 பல்கல்கலைகளில் நடந்த ஊழல் பட்டியல்களை, கவர்னரிடம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையில் நடந்த உயர்கல்வி குறித்த கருத்தரங்கில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், 'தமிழகத்தில், துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை, கவர்னராக பதவியேற்ற பின், அறிந்து கொண்டேன். ஆரம்பத்தில், இதை நான் நம்பவில்லை; பின், அது உறுதியானவுடன், நான் மிகவும் வருத்தமடைந்தேன்' என்றார்.ஆனால், அதுகுறித்து நேற்று முன்தினம், கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக, நான் நேரடியாக கூறவில்லை; கல்வியாளர்கள் கூறியதைத்தான் கூறினேன்' என, விளக்கமளித்து, இச்சிக்கலில் இருந்து விலகியுள்ளார்.தமிழகத்தில், மொத்தமுள்ள, 21 பல்கலைகளிலும் நடந்த ஊழல்களை, பா.ம.க., விரிவாக தொகுத்திருக்கிறது. கவர்னர் அழைத்தால், எந்த நேரமும், அந்த ஊழல் பட்டியலை, கவர்னரிடமும் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். நேர்மையை போற்றும் கவர்னராக இருந்தால், அக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
12-அக்-201800:43:41 IST Report Abuse
Devanand Louis இந்த மரம்வெட்டியான் செய்த ஊழல்களெல்லாம் தெரியும் இவருடைய மகன் மெகா ஊழல் செய்தான் பின்பு இவருடைய கையால் ஊழல் பட்டியல் அளிக்கப்போறாராம் வெட்கக்கேடு
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
11-அக்-201815:44:40 IST Report Abuse
Indhuindian எதுக்கு புலி வருது புலி வருதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க வெளியில விடுங்க நாங்களாவது தெரிஞ்சிக்கிறோம் கருத்து போடவாவது சரியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-அக்-201815:07:43 IST Report Abuse
samuelmuthiahraj அதே போல பாமக கட்சியை பயன்படுத்தி பதவிக்கு வந்த பிரமிள் காஞ்சிபுரத்தில் செய்துள்ள சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு பற்றிய புகாரையும் கவர்னருக்கு தாருங்கள் அப்படி தரப்படடால் அது சரி செய்யப்பட்டால் நிச்சயம் அன்புமணி அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்பார் இல்லையெனில் நல்ல பல நபர்களை பெற்றுள்ள உங்கள் கட்சிக்கு வாய்ப்பு வராது போய்விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X