டில்லி அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை Dinamalar
பதிவு செய்த நாள் :
டில்லி அமைச்சர் வீடுகளில்
வருமான வரி சோதனை

புதுடில்லி : டில்லி போக்குவரத்து துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான, கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில், வருமான வரித்துறையினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

டில்லி,அமைச்சர்,வீடுகளில்,வருமான வரி,சோதனை


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இவரது அமைச்சரவையில், கைலாஷ் கெலாட், போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

குற்றச்சாட்டு:


இவரது குடும்பத்தார், 'ரியல் எஸ்டேட்' மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, டில்லி மற்றும் ஹரியானாவில் உள்ள குர்கானில், அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுடன் நட்பு வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சோதனைகளை எங்கள் மீது ஏவி விடுகிறார்.

Advertisement

மன்னிப்பு :


என் வீடு மற்றும் என் அமைச்சரவையில் உள்ள சத்யேந்தர், மணிஷ் ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் எதுவும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொந்தரவு செய்வதற்காக, டில்லி மக்களிடம் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201817:27:52 IST Report Abuse

Endrum Indianஅவனுவனுக்கு என்ன சம்பாத்தியம் செய்தாலும் செலவு போக ஒண்ணு ரெண்டு இடத்துக்கே சிங்கி அடிக்க வேண்டியிருக்கு, அப்படி என்ன பெரிய தொழில் செஞ்சான் 16 சொந்த இடத்தில் அதிரடி சோதனைக்கு

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201817:25:53 IST Report Abuse

Endrum Indianகைலாஷ் கெலாட்டுக்கு சொந்தமான, 16 இடங்களில்??? ஏண்டா அவன் அவன் சம்பாதிச்சதில் ஒண்ணு ரெண்டு இடத்துக்கே சிங்கி அடிக்குது???இவனுக்கு 16 இடத்தில் அதிரடி சோதனையா???உள்ளே போடுங்க, விசாரணை ஒரு வாரம் ஒரு வாரம் மட்டும் செய்யுங்க, பிறகு இவனை சொர்க்கத்திற்கு அனுப்பி விடுங்கள், அது தான் சிறந்த முடிவு.

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
11-அக்-201816:09:45 IST Report Abuse

Mohan Nadarஇவர்கள் ஆளும் மாநிலங்களில் வருமான வரி துறை மூடப்பட்டு விட்டதா??

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X