'ரபேல் விமானம் வாங்கும் முடிவு எடுத்தது எப்படி' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ரபேல் விமானம்
வாங்கும் முடிவு எடுத்தது எப்படி'

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' போர் விமானங்களை வாங்கும் நடைமுறைகள் தொடர்பான விரிவான அறிக்கையை, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரபேல்,விமானம்,வாங்கும்,முடிவு,எப்படி


பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 2016, செப்., 23ல், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், காங்.,கை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர், தெஹ்ஸீன் பூனாவாலா, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறாதது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை குறித்தும், அது தொடர்பாக விசாரணை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை, நாட்டின் பாதுகாப்பு கருதி வெளிப்படையாக தெரிவிக்க முடியாது,'' என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான முடிவை எடுக்க மேற்கொள்ளப்பட்ட

Advertisement

நடைமுறைகள் குறித்த தகவல்களை, மத்திய அரசு, மூடப்பட்ட உறையில் வைத்து, 29ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். போர் விமானங்களின் விலை தொடர்பான தகவலை, அரசு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒப்பந்தம் தொடர்பான முடிவு எடுக்க மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் முறையானவைதானா என்பதை தெரிந்து கொள்ளவே, அந்த தகவல்களை நீதிமன்றம் கேட்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு, அக்., 31ல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
11-அக்-201819:56:15 IST Report Abuse

muruguரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது மாட்டிக்கொண்டார் ஏழை தாயின் தவப்புதல்வன் ""மீடியாபார்ட்"" என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை மிக தெள்ள தெளிவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது அதுமட்டுமா நிர்மலாவின் பிரெஞ்சு விஜயத்தயும் கேள்விகேட்டு இருக்கிறது

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
11-அக்-201814:39:43 IST Report Abuse

sahayadhasஐயா ரபேல் காந்தி எவட .ஆள கானோம்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-201817:59:40 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ரபேல் மோசடி எங்கேன்னு சொல்லுமய்யா.....

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
11-அக்-201814:37:28 IST Report Abuse

sahayadhasதுண்ட காணோம் துணிய காணோனு ஓட தொடங்கிட்டாங்க . ஆட்ட போடனுலாலும் சற்று உழைக்கனும்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X