தட்டுப்பாடு!| Dinamalar

தமிழ்நாடு

தட்டுப்பாடு!

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மாவட்டத்தில் நடவு இயந்திரம்...சம்பா பயிரிடும் விவசாயிகள் தவிப்புகடலுார்:கடலுார் மாவட்டத்தில் சம்பா நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளதால் நடவு செய்யும் இயந்திரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் குறிப்பிட்ட நாளில் நடவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நெல் நடவு செய்வதற்கு ஏற்றவாறு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மேட்டூர் அணையை நிரப்பியது.இதன் காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் சம்பா நடவுப்பணிக்கு திறந்து விடப்பட்டது. அத்துடன் அரபி கடலில் உருவான லுாபான் புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பரவலான மழை பெய்தது. அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் 'தித்லி' புயல் காரணமாக மீண்டும் பரவலான மழை பெய்தது. இந்த மழை சம்பா நெல் நாற்று விடுவதற்கும், முன் பருவத்தில் நாற்று விட்டுள்ள விவசாயிகள் நடவு செய்வதற்கும் ஏற்றதாக இருந்தது.மாவட்டத்தில் காவிரி நீரை நம்பியிருந்த டெல்டா விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்தி நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் பாசன தண்ணீரை நம்பாமல் நிலத்தடி நீரைக்கொண்டு நடவுப்பணியை முடித்து விட்டனர்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் நடவு 25 சதவீதம் நடவு பணி முடிவடைந்துள்ளது. 'தித்லி' புயல் காரணமாக மழை இருந்ததால் நடவு பணி சில நாட்கள் தள்ளிப்போனது. தற்போது மழை ஓய்ந்ததும் நடவு பணி தீவிரமடைந்துள்ளது.இதற்கிடையே விவசாயக் கூலிகள் பற்றாக்குறையால் ஏராளமான விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறியுள்ளனர். அதனால் நடவுக்கு மானிய உதவி கிடைப்பதோடு, விதை, சாகுபடி செலவு குறைகிறது. மேலும், அதிக பரப்பளவு நெல் நடவு செய்யும் விவசாயிகள் முழுக்க முழுக்க இயந்திரங்களை பயன்படுத்தி நடவு செய்கின்றனர். இதனால் விவசாயிகள் நடவு இயந்திரத்தை நாடுவதால், நடவு இயந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் நடவு இயந்திரத்தை தேடி விவசாயிகள் அலைகின்றனர்.விவசாயிகள் படும் கஷ்டத்திற்கு ஏற்றவாறு அறுவடையின்போது சிறந்த விலை கிடைக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X