எஸ்.பி.ஐ., வங்கியில் ரூ.5,555 கோடி மோசடி Dinamalar
பதிவு செய்த நாள் :
எஸ்.பி.ஐ., வங்கியில்
ரூ.5,555 கோடி மோசடி

எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கியில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

SBI,எஸ்.பி.ஐ., வங்கி,ரூ.5555 கோடி,மோசடி


கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த, தொழில் அதிபர் விஜய் மல்லையா, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர், பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய்

கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இவர்கள் மீது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகளில், கடந்த ஆறு மாதங்களில் நடந்த வங்கி பண மோசடி குறித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, சந்திரசேகர் கவுட், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்விக்கு, வங்கியின் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 669 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம், 723 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நடந்த, 660 மோசடி சம்பவங்களில், 4,832 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எஸ்.பி.ஐ.,யில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-அக்-201819:31:30 IST Report Abuse

Nallavan Nallavanவங்கி மோசடிகள் எந்தக் கட்சி ஆட்சியிலும் நடப்பவைதான் என்று ஏற்கனவே சொல்லி வந்துள்ளேன் ...... இந்தக் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி ......

Rate this:
தலைவா - chennai,இந்தியா
13-அக்-201800:13:51 IST Report Abuse

தலைவா எஸ்.பி.ஐ.,யில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆப் கி பார் மோசடி சர்க்கார் ஹே....

Rate this:
mayavan - Chennai,இந்தியா
11-அக்-201817:39:00 IST Report Abuse

mayavanஐயோ ஐயோ எப்படி வங்கிகளில் கடன் வாங்குவது தெரிமால் பொய் விட்டதே. மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆயிருக்கலாமே

Rate this:
தலைவா - chennai,இந்தியா
13-அக்-201800:15:05 IST Report Abuse

தலைவா குறைந்த பட்சம் மோடியுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அவருடன் வெளி நாட்டிற்கு தொழில் முனைவோராக சென்று இருந்தால் முன்னுரிமை. முயற்சி செய்யவும்....

Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
11-அக்-201817:21:15 IST Report Abuse

N.K"இவனை வேலைய விட்டு தூக்கிட்டு, உடைஞ்ச பொருளுக்கெல்லாம் உங்கப்பனா காசு குடுப்பான்" என்பது போல் இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமானால் பாஜக ஆட்சி தொடரவேண்டும். புதிய திவால் சட்டம் கொண்டுவந்தது, உத்திரவாதம் அளிப்பவரின் சொத்தையும் முடக்குவது போன்ற நடவடிக்கைகள் இந்த ஆட்சியில்தான். காங்கிரஸ் காலத்தில் "இவையெல்லாம் வாராக்கடன்" என்று அறிவிக்கக்கூடவில்லை. இந்த ஆட்சி தொடர்ந்தால் தான் இதற்கு விடிவு, ஆட்சி மாறினால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை அதுவும் ராகுல் எல்லாம் பிரதமர் ஆனால் கஷ்டம்.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
13-அக்-201800:16:38 IST Report Abuse

தலைவா ராகுல் எல்லாம் பிரதமர் ஆனால் கஷ்டம் ......

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X