ம.பி.,யில் காங்., ரத யாத்திரை : தடுத்து நிறுத்தியது போலீஸ்| Dinamalar

ம.பி.,யில் காங்., ரத யாத்திரை : தடுத்து நிறுத்தியது போலீஸ்

Added : அக் 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டின்டோரி: மத்திய பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட, 'ராம ரத யாத்திரை' போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.இந்த மாநிலத்தில், அடுத்த மாதம், 28ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மத ரீதியான கூட்டங்கள் நடத்தவோ, மத உணர்வுகளை துாண்டும் வகையிலான, யாத்திரைகள், பேரணிகள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.பதற்றம் நிறைந்த தொகுதியாக கருதப்படும் டின்டோரி மாவட்டத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில், காங்கிரஸ் சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ராம ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ராமர் படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ரதத்தில், 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்து, பஜனை செய்தபடி, நகர் வலம் வந்தனர். இது குறித்து 'ஆசார் சம்ஹிதா உல்லங்கன்' என்ற அமைப்பினர், போலீசில் புகார் அளித்தனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு அமலில் உள்ள இந்த நேரத்தில், காங்கிரசாரின் ராம ரத யாத்திரை, மக்கள் மத்தியில் மத உணர்வுகளை துாண்டும் வகையில் உள்ளதாக, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து யாத்திரை நடத்த தடை விதித்த போலீசார், அந்த ரதத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-அக்-201807:11:13 IST Report Abuse
Loganathan Kuttuva எந்த எந்த மாநிலத்தில் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிந்து கொண்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X