பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் துணை ஜனாதிபதி பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும் துணை ஜனாதிபதி பேச்சு

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும்  துணை ஜனாதிபதி பேச்சு

திண்டுக்கல் : 'இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என, திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமானவை. இந்தியாவில் எல்லா மக்களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் கிடைக்கிறது. பிற நாடுகள் உணவுக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன. வெளிநாட்டு உணவுப் பொருட்களால் நம் நாட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற பாரம்பரிய உணவுக்கு பாதிப்பு வராது.இந்தியாவில் மட்டும் தான் நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியினால் கிராமப்புறங்களில் இருப்பவர்களிடமும் கல்வி பயிலும் தன்மை அதிகரித்து வருகிறது.எந்த மொழியில் பேசினாலும், தாய் மொழியில் பேசுவது போல் உணர்வு பூர்வமாக இருக்காது. படிப்பு, வேலைக்காக வெளிநாடு சென்றாலும் தாய்மொழி,பெற்றோர், நாட்டை மறக்க கூடாது.இந்தியா பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் 3வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
'பாடிக்காக மோடி யோகா செய்யுங்கள்' : துணைஜனாதிபதி, 'அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தமிழில் பேச துவங்கினார். அதன் பிறகு, ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் பேசினார். பிறகு மீண்டும், தாய் மொழி குறித்து பேசுகையில், அம்மா, அப்பா என அவரவர் தாய் மொழியில் பேசுங்கள், அழையுங்கள் என்றவர், உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம். எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க மோடி யோகா செய்யுங்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X