'தேவாங்கர் கலை கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேவாங்கர் கலை கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்'

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'தேவாங்கர் கலை கல்லுாரியை தமிழக அரசே தற்காலிகமாக ஏற்று நடத்த வேண்டும்' என பா.ம.க., இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லுாரி, அரசு நிதியுதவியுடன் தன்னாட்சி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது.கல்லுாரி செயலர் ராமசாமி, தன் பதவிக்காலம் முடிந்த பின் கல்லுாரியை கபளீகரம் செய்ய துடிக்கிறார். அவருக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நிர்வாகம் முடங்கியுள்ளது. 'ராமசாமி பதவியில் தொடருகிறாரா என விளக்கம் கேட்டு கல்லுாரி முதல்வர் பாண்டியராஜன் எழுதிய கடிதத்திற்கு இரு மாதங்களாகியும் பதில் தரவில்லை.சில ஆண்டுகளில், செய்யப்பட்ட பணி நியமனங்கள் குறித்தும், அதில் கல்லுாரி செயலர் ராமசாமிக்கு உள்ள தொடர்பு குறித்தும், விசாரணை நடத்த வேண்டும்.கல்லுாரி நிர்வாகத்தை அரசே தற்காலிகமாக நடத்த தமிழக அரசு பரி சீலிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X