தினகரனின் செயல்பாடு தமிழகத்திற்கு சாபக்கேடு : அமைச்சர் காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினகரனின் செயல்பாடு தமிழகத்திற்கு சாபக்கேடு : அமைச்சர் காட்டம்

Added : அக் 11, 2018
Advertisement

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: தினகரன் எம்.எல்.ஏ., செல்வாக்கற்றவர். ஊடகத்துறை கவனத்தை தன் பக்கம் திருப்ப அநாகரீகமாக செயல் படுகிறார். நடந்த சந்திப்பு குறித்து உடனடியாக கூறாமல் அதன்மூலம் பயன்பெற பிளாக் மெயில் செய்கிறார். ஜெயலலிதாவையே மிரட்டியவர் எங்களை விடுவாரா. தினகரனின் செயல்பாடு நல்லதல்ல. தமிழகத்திற்கு சாபக்கேடு. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீது பல தவறான தகவல்களை தினகரன் தற்போது வெற்றிவேல் வாயிலாக கூறி வருகிறார், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X