நிம்மதி!ரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு| Dinamalar

தமிழ்நாடு

நிம்மதி!ரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நிம்மதி!ரீபண்ட பெறுவதில் சிக்கல் நீங்கியதால்... மெஷின் இறக்குமதிக்கும் சலுகை உண்டு

திருப்பூர்:இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறலாம் என்கிற அறிவிப்பு, ஏற்றுமதியாளர்களை நிம்மதியடைய செய்துள்ளது.
திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், மத்திய அரசிடம் முறையிட்டு, ஜி.எஸ்.டி., வரி சார்ந்த குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படுத்திவருகின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி.,ல், இருவேறு வகைகளில், ரீபண்ட் பெற வழிவகை உள்ளது.ஆடை ஏற்றுமதியின் போது வரி செலுத்திவிட்டு, ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறுவது; இன்னொரு வழிமுறையில், வரி செலுத்தாமல், உறுதிமொழி கடிதம் வழங்கி, ரீபண்ட் பெறுவது. இரு வழிமுறைகளில், வரி செலுத்திவிட்டு ரீபண்ட் பெறும் ஐ.ஜி.எஸ்.டி., முறை எளிதாக உள்ளது.
எனவே, திருப்பூர் பகுதி ஏற்றுமதியாளர்கள், இந்த வழிமுறையை பின்பற்றி ரீபண்ட் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இ.பி.சி.ஜி., திட்டத்தில் வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெறமுடியாது எனவும்; இந்த நடைமுறை, 2017 அக்., முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், ஐ.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறமுடியாமல் தவித்தனர். இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வழிமுறையில் ரீபண்ட் பெற அனுமதிக்கவேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தற்போது, இ.பி.சி.ஜி., திட்டத்தில் மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி, ரீபண்ட் பெறும் நடைமுறையை பின்பற்ற அனுமதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
இ.பி.சி.ஜி., திட்டத்தில், வரி விலக்கு பெற்று, மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்தி ரீபண்ட் பெறும் வழிமுறையை பின்பற்ற முடியாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், ரீபண்ட் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரித்துறை வாரிய தலைவர் ரமேஷ், உறுப்பினர் மகேந்தர் சிங் உள்பட துறை அதிகாரிகளிடம், இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. வரி விலக்கு பெற்று மெஷின் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்ட் பெறும் முறையை பின்பற்றலாம் என அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பின்னலாடை துறையினருக்கு மிகப்பெரிய ஆறுதலும், நிம்மதியும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X