திறப்பு!| Dinamalar

தமிழ்நாடு

திறப்பு!

Updated : அக் 11, 2018 | Added : அக் 11, 2018
Advertisement
 திறப்பு!

காட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்காலிகமாக...4 ஆண்டிற்கு பின் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சிவிழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, வாகன போக்குவரத்து செயல்பட, நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில், அணுகு சாலை அமைக்கப்பட்டு, மேம்பால திறப்பு விழா நடத்தப்படுகிறது.விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ரூ.36 கோடி மதிப்பில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இப்பணி 2017 ஜூலை மாதம் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்தம் வழங்கப்பட்டது.முழுமையாக நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் மேம்பாலம் பணி மிகுந்த தாமதமானது. சென்னை மார்க்கத்தில் மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணி, ஓராண்டிற்கு முன் நிறைவு பெற்றது.இதையடுத்து, நகரில் உள் பகுதியான திருச்சி மார்க்கத்தில் 110 மீட்டர் அணுகு சாலைக்கு இடம் கையகப்படுத்துவதில் இழுபறி நிலவியது. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, மீண்டும் பணிகள் தொடர்ந்தது.இந்நிலையில், மேம்பாலப் பணிகள் முழுமையடைந்து, நகர பகுதியில் அணுகு சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலத்தின் கீழ்புறத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இரு சக்கர வாகனங்கள் மட்டும், ரயில்வே மேம்பாலம் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணி முதல், இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களும், காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக இயக்குவதற்கு, தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டது. பாலத்திற்கு செல்வதற்கான அணுகு சாலை, அடுத்த சில தினங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின், மேம்பாலத் திறப்பு விழா முறைப்படி நடத்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X