போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுவது எப்போது | Dinamalar

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்படுவது எப்போது

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்தி அதனுடன் வைகை அணை ஸ்டேஷனை இணைக்க அரசுக்கு செய்யப்பட்ட பரிந்துரைகிடப்பில் போடப்பட்டுள்ளது.வைகை அணை போலீஸ் ஸ்டேஷன் ஆண்டிபட்டி டி.எஸ். பி., கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த போலீஸ் எல்லையில் உள்ள வைகை புதுார், முதலக்கம்பட்டி, தாயமங்கலம், வைகை அணை கிராமங்கள் பெரியகுளம் தாலுகா எல்லைக்குள் உள்ளது.இதனால் சட்டம் ஒழுங்குபிரச்னைகளுக்கு ஆண்டிபட்டிக்கும், மற்ற பணிகளுக்கு பெரியகுளம் சென்றுவருகின்றனர். பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்பட்டு வரு கிறது.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தி வைகை அணை ஸ்டேஷனை அதனுடன் இணைக்கவும், கெங்குவார்பட்டியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து தேவதானப்பட்டிஸ்டேஷன் கட்டுப்பாட்டுடன் இணைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால் அதுகிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள், போலீசார் நலன் கருதி இதில் பாஸ்கரன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X