அ.தி.மு.க.,வின் 'ரிமோட்' பா.ஜ.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வின் 'ரிமோட்' பா.ஜ.,

Added : அக் 11, 2018

மதுரை:"தமிழகத்தில் அ.தி.மு.க., அரசை ரிமோட் மூலம் பா.ஜ., இயக்குகிறது," என, மதுரையில் அகில இந்திய காங்., செயலாளர் சஞ்சய் சத் சாடினார்.மதுரை நகர் வடக்கு, தெற்கு மாவட்ட காங்., சார்பில் லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், ஜெயராமன், மாநில பொது குழு உறுப்பினர் சையதுபாபு முன்னிலை வகித்தனர். சஞ்சய் தத் பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி அரசு செயல்படுத்தி வருகிறது. அரசை ரிமோட் மூலம் பா.ஜ., இயக்குகிறது. இவ்விரு கட்சிகளின் ஊழல்களை மக்களிடம் காங்., கொண்டு செல்லும். பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டும் ஆபத்துள்ளது. பிரதமர் மோடி கூறியது போல் பண மதிப்பீடு இழப்பால் தீவிரவாதம், கறுப்பு பணம் ஒழியவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 'கமிஷன்' கைமாறியுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X