தபால் அலுவலகத்தில் கைவரிசை துணை அஞ்சலக அதிகாரி காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தபால் அலுவலகத்தில் கைவரிசை துணை அஞ்சலக அதிகாரி காயம்

Added : அக் 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வால்பாறை:வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் எஸ்டேட். இங்குள்ள தபால் நிலையத்தில் துணை அஞ்சலக அதிகாரியாக பணியாற்றுபவர் பழனிசாமி,38. அலுவலகம் அருகிலுள்ள குடியிருப்பில் வசிக்கிறார்.
முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு, தபால் அலுவலகம் மூலம், மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 12:00 மணிக்கு தபால் அலுவலகத்தின் பின்பக்கம் வழியாக, மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். சப்தம் கேட்டு எழுந்த, துணை அஞ்சலக அதிகாரி, மர்ம நபரை பிடிக்க முயற்சித்தார்.
ஆனால், அதிகாரியை தாக்கி விட்டு, மர்ம நபர் எஸ்கேப் ஆனார். அதிகாரிகளின் சமயோசித நடவடிக்கையால், அலுவலகத்தில் இருந்த பணம், 4 லட்சம் ரூபாய் தப்பியது. முடீஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் அலட்சியம்
தபால் அலுவலகத்தில் நடந்த திருட்டு முயற்சி குறித்து, இரவு, 1:00 மணிக்கு முடீஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'காலையில் பார்த்துக்கொள்ளலாம்,' என்று போலீசார் அலட்சியமாக இருந்து விட்டனர்.
உடனடியாக வால்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்திருந்தால், மர்ம நபரை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிடித்திருக்கலாம். போலீசாரின் அலட்சியத்தால், அந்த நபர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X